#darbar: பர்ஸ்ட் லுக்லேயே செம ‘பஞ்ச்’.. தர்பார் போஸ்டர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா?

சென்னை: தர்பார் பட போஸ்டரிலேயே ரஜினி பேசுவது போன்ற பஞ்ச் வசனம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு தர்பார் எனப் பேர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. போஸ்டரிலேயே ரஜினி போலீஸ் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் ரஜினி போலீஸ் கெட்டப்பில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் அவை எதிர்பாராத விதமாக இணையத்தில் லீக்காயின.

போலீசாக ரஜினி:

போலீசாக ரஜினி:

அப்போதே ரஜினி இப்படத்தில் போலீசாகத்தான் நடிக்கிறார் என்பது உறுதியானது. இந்நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் படக்குழு அதனை உறுதி செய்துள்ளது. ரஜினி படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

ஐபிஎஸ்:

ஐபிஎஸ்:

போஸ்டரில் அவருக்குப் பின்னே இரண்டு துப்பாக்கிகள் உள்ளன. ஒரு கைவிலங்கு திறந்த நிலையில் உள்ளது. போலீஸ் நாய் ஒன்றும் உள்ளது. போலீஸ் பெல்ட், தொப்பி, தோளில் மாட்டும் பேட்ஜ் போன்றவைகளும் உள்ளன.

மும்பை கதைக்களம்:

மும்பை கதைக்களம்:

அதேபோல், பின்னணியில் ஒரு மேப்பும், கட்டிடமும் இடம் பெற்றுள்ளது. குற்றம் நடைபெறும் இடங்களில் ஒட்டப்படும் மஞ்சள் டேப்பும் உள்ளது. அதோடு, மும்பை என்ற வார்த்தையும் தலைகீழாக எழுதப்பட்டுள்ளது.

பஞ்ச் வசனம் :

பஞ்ச் வசனம் :

அதோடு, ‘நான் நல்லவனா இருக்கணுமா, கெட்டவனா இருக்கணுமா இல்ல மோசமானவனா இருக்கணுமா.. நீங்களே முடிவு பண்ணுங்க" என்ற பஞ்ச் வசனமும் கிறுக்கலாக போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஜினி நல்லவர்களுக்கு நல்லவனாகவும், கெட்டவர்களுக்கு கெட்டவனாகவும் மாறுவார் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X