மரண மாஸா ஒரு சாங் போட்டாச்சு.. அடுத்து என்ன ’சும்மா கிழி’க்க வேண்டியதுதான்!

Recommended Video

Darbar Dubbing | Darbar Motion Pictures | Rajinikanth | A.R.Murugadoss

சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் ரஜினிக்கு 'மரண மாஸ்' எனும் ஓபனிங் பாடலை அனிருத் போட்டிருந்தார்.

தர்பார் படத்திற்கும் இசையமைத்து வரும் அனிருத், 'சும்மா கிழி' என்ற மாஸ் ஓபனிங் பாடலை போட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தர்பார்

தர்பார்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பாபர், நிவேதா தாமஸ், யோகி பாபு, யோகராஜ் சிங் மற்றும் சமத்தா அச்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தர்பார். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது.

எஸ்.பி.பி

எஸ்.பி.பி

நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஓபனிங் பாடல் என்றாலே அது நம்ம எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் கேட்டாத்தான் மாஸா இருக்கும். முத்து படத்தில் வரும் ஒருவன் ஒருவன் முதலாளி, பாட்ஷா - ஆட்டோக்காரன், அருணாச்சலம் - அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான் டா, கடைசியாக அனிருத் இசையில் வெளியான மரண மாஸ் பாடலிலும், ரஜினி வரும் போர்ஷன்கள் எஸ்.பி.பி., குரலிலே கம்பீரமாக ஒலிக்கும். தர்பார் படத்தின் ஓபனிங் பாடலான ‘சும்மா கிழி' பாடலும் அனிருத் மற்றும் எஸ்.பி.பி., இணைந்து பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பக்காவான சிச்சுவேஷன்

பக்காவான சிச்சுவேஷன்

மும்பையில் போலீஸ் அதிகாரியாக வரும் ஆதித்ய அருணாச்சலத்திற்கு ஒரு பாராட்டு விழா. ஆனால், விழாவின் போது, எதுக்கு எனக்கு இந்த பாராட்டு விழா, நான் என் கடமையை தானே செய்தேன் எனக் கூறுவாராம். காக்கி யூனிஃபார்மில் இருக்கும் வரை காவல் அதிகாரியாகவும், காக்கி சட்டையை கழட்டிய பிறகு, மக்களுள் ஒருவராக இருக்கும் சிச்சுவேஷனில் ஓபனிங் சாங் அருமையாக இடம்பெற்றுள்ளது என சமீபத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அளித்த ஒரு பேட்டியில் படம் குறித்த சிறு தகவலை வெளியிட்டுள்ளார்.

காக்கிச் சட்டை

காக்கிச் சட்டை

காக்கிச் சட்டை போட்டு பல நடிகர்கள் சூப்பர் ஹீரோக்களாகவும், மாஸ் நடிகர்களாகவும் மாறி உள்ளனர். ஆனால், நடிகர் ரஜினிகாந்த், போலீஸ் உடையில் குறைந்த அளவிலான படங்களிலேயே நடித்துள்ளார். போலீஸ் கெட்டப்பில் அவர் நடித்த மூன்று முகம் போலீஸ் படங்களிலேயே இன்றளவும் சிறந்த படமாக விளங்குகிறது. கடைசியாக 1992ம் ஆண்டு பாண்டியன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ரஜினிகாந்த், 27 ஆண்டுகளுக்குப் பிறகு தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரி ஆதித்ய அருணாச்சலம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இசை வெளியீடு

இசை வெளியீடு

தர்பார் படத்தின் இசை வெளியீடு, வரும் டிசம்பர் 6ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த லைகா நிறுவனம் ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதிக்குள் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X