அந்த புல்லட் இதுதான்.. தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிள் ’சும்மா கிழி’ ரிலீஸ் தேதியை அறிவித்த அனிருத்!

சென்னை: தர்பார் படத்தின் ஓபனிங் சாங் 'சும்மா கிழி' என்ற அப்டேட்டை இரண்டு நாளைக்கு முன்னதாகவே லீக் ஆகியிருந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் அனிருத் அதனை உறுதி செய்துள்ளார்.

மேலும், நவம்பர் 27ம் தேதி 'சும்மா கிழி' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது என்ற மாஸ் அறிவிப்பையும் அனிருத் வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

ரஜினியின் 2.0 படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தர்பார் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

சும்மா கிழி

இந்த பொங்கலுக்கு வெளியான பேட்ட படத்தில் ரஜினிக்கு மரண மாஸ் பாடலை போட்ட இசையமைப்பாளர் அனிருத், அடுத்த பொங்கலுக்கு சும்மா கிழி கிழின்னு ஒரு செம்ம மாஸ் சாங்கை போட்டுள்ளார். விஜய்க்கு வெறித்தனமான வரிகளை எழுதி வரும் பாடலாசிரியர் விவேக் வரிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் சும்மா கிழி பாடல் கிழிக்கப் போகிறது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

அனிருத் இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ள இந்த பாடல், வரும் நவம்பர் 27ம் தேதி ரஜினி ரசிகர்களுக்கு வெயிட்டான விருந்தாக வெளியாகிறது.

என்ன சிச்சுவேஷன்

என்ன சிச்சுவேஷன்

மும்பையில் போலீஸ் அதிகாரியாக வரும் ஆதித்ய அருணாச்சலத்திற்கு ஒரு பாராட்டு விழா. ஆனால், விழாவின் போது, எதுக்கு எனக்கு இந்த பாராட்டு விழா, நான் என் கடமையை தானே செய்தேன் எனக் கூறுவாராம். காக்கி யூனிஃபார்மில் இருக்கும் வரை காவல் அதிகாரியாகவும், காக்கி சட்டையை கழட்டிய பிறகு, மக்களுள் ஒருவராக இருக்கும் சிச்சுவேஷனில் ஓபனிங் சாங் அருமையாக இடம்பெற்றுள்ளது என சமீபத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அளித்த ஒரு பேட்டியில் படம் குறித்த சிறு தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரம்மாண்ட ஆடியோ லான்ச்

பிரம்மாண்ட ஆடியோ லான்ச்

தர்பார் படத்தின் ஆடியோ லான்ச், வரும் டிசம்பர் 6ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த லைகா நிறுவனம் ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதிக்குள் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X