Darbar முருகதாஸ் நிலை வேறு யாருக்கும் வரவே கூடாது
Recommended Video
சென்னை: தர்பார் பட ஸ்டில்களை பார்த்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நினைத்து பலர் பரிதாபப்பட்டுள்ளனர்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். அந்த படத்தின் போட்டோஷூட் துவங்கியதில் இருந்தே முருகதாஸுக்கு தலைவலியாக உள்ளது.
ஸ்டுடியோவில் நடந்த போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கசிந்துவிட்டன. அதை வெளியாட்கள் யாரும் கசியவிட வாய்ப்பே இல்லை. அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து கசிந்து கொண்டே இருக்கின்றன.

தர்பார்
தர்பார் பட அப்டேட் வெளியிடப்போவதாக அறிவித்து நேற்று மாலை ஹெச்.டி. ஸ்டில்ஸை, டைட்டில் டிசைனை வெளியிட்டார் முருதாஸ். அவர் வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்களுமே அருமை. ரஜினி வழக்கம் போன்று ஸ்டைலாக, மாஸாக இருக்கிறார். ஆனால் புகைப்படங்களை பார்க்கும்போது முருகதாஸ் தான் நினைவுக்கு வருகிறார். இந்த புகைப்படங்களையும் யாரும் கசியவிடும் முன்பு நாம் முந்திக் கொள்வோம் என்று முருகதாஸ் வெளியிட்டுவிட்டாரோ என்று அவர் மீது பாவப்பட தோன்றுகிறது.

முருகதாஸ்
ஆசை, ஆசையாய் ரஜினியை வைத்து படம் இயக்கி வருகிறார் முருகதாஸ். ஆனால் பாவம் எப்பொழுது எது கசியுமோ என்ற கவலை இல்லாமல் படம் எடுக்க முடியவில்லை. தர்பார் புகைப்படங்கள், வீடியோக்கள் கசிய படக்குழுவில் உள்ள யாரோ தான் காரணம் என்று பேச்சு எழாமல் இல்லை. ஒரு கிரியேட்டரை நிம்மதியாக வேலை பார்க்க விடாமல் இப்படி புகைப்படங்களை கசியவிட்டு அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறார்கள். எதுவும் கசியாமல் இருக்க முருகதாஸ் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் பலன் இல்லை.

சூப்பர் ஸ்டார்
முருகதாஸ் நிலை வேறு யாருக்கும் வரவே கூடாது. சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று எத்தனையோ இயக்குநர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் அந்த அரிய வாய்ப்பு கிடைத்தும் நிம்மதியாக அவரால் பணியாற்ற முடியவில்லை.

ரசிகர்கள்
முருகதாஸின் திறமை மீதான பொறாமையில் இப்படி செய்யலாம் இல்லை என்றால் ரஜினியின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைக்க வேண்டும் என்று நினைத்து செய்யலாம். எதுவாக இருந்தாலும் முருகதாஸ் தான் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் எந்த படங்களுக்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











