twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தர்பார் நஷ்டம்.. வினியோகஸ்தர்கள் வருத்தம்.. டி.ஆர் குற்றச்சாட்டு!

    |

    Recommended Video

    தர்பார் மிகப்பெரிய நஷ்டம் | KADAMBUR RAJU PRESS SPEECH | FILMBEAT TAMIL

    சென்னை: ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் நஷ்டம் அடைந்துள்ளது. இதையடுத்து தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வினியோகஸ்தர்கள் டி.ராஜேந்திரனிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் , தயாரிப்பாளர், வினியோகஸ்தர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி.ராஜேந்திரன். இவர் பேசும் ஒவ்வொரு விசயமும் பகிரும் கருத்தும் கட்டாயம் அனைத்து மக்களால் கவனிக்கப்படும் ஒரு விசயம். நேற்று டி.ராஜேந்திரன் தர்பார் பட வினியோகஸ்தர்கள் பற்றி பேசியிருக்கிறார்.

     Darbar loss: distributors meet t.rajendar

    அடிப்படையில் நானும் ஒரு வினியோகஸ்தர் தான் என தெரிவித்து கொண்டார். வினியோகஸ்தர்கள் ஒன்றும் நடிக்க வரவில்லை நஷ்டம் அடைந்ததால், தான் வந்து வீட்டு வாசலில் வந்து நின்று, படம் நஷ்டம் என்று முறையிட்டு வருத்தப்படுகிறார்கள் என கூறினார். மேலும் ரஜினி எனது நண்பர் நான் இதை பற்றி சரியான இடத்தில் பேச காத்து கொண்டிருந்தேன் என கூறினார் .

    மேலும் வினியோகஸ்தர்கள் பொய் கூறுகிறார்கள் என்ற பிம்பம் பரவுகிறது. அதனால் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு. அதே போல விசாரித்து சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றார். சென்னை செங்கல்பட்டு வினியோகஸ்தர்கள் சங்க தலைவராக நான் இதை கண்டிப்பாக கேட்டாக வேண்டும் என்றும் கூறினார் .

    ஆஸ்கர் 2020: சிறந்த நடிகைக்கான விருதை பெறப்போவது யார்.. நாமினேஷன் லிஸ்ட் இதோ!ஆஸ்கர் 2020: சிறந்த நடிகைக்கான விருதை பெறப்போவது யார்.. நாமினேஷன் லிஸ்ட் இதோ!

    மேலும் நடிகர் விஜய் படப்பிடிப்பின் போது வருமானவரித்துறையினர் அழைத்து சென்றதை பற்றி யாரும் எதுவும் கூற முடியாது. இந்த கட்டமைப்பில் நானும் இருக்கிறேன். அதை பற்றி விமர்சனம் செய்வது முறையல்ல என்று கருதுகிறேன் என டி.ஆர் குறிப்பிட்டார்.

     Darbar loss: distributors meet t.rajendar

    தர்பார் பட வினியோகஸ்தர்கள் சார்பில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் பற்றி இதுவரையில் எந்த சங்கத்தின் சார்பிலும் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது சரியான முறையில் விசாரிக்கப்பட்டு வினியோகஸ்தர்கள் லாபம் அடைய வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து என்றார்.

    டி.ஆர் எப்போதும் இப்படி சமூக கருத்துகளுக்கு தனது கருத்தையும் குறைந்த பட்சம் தனது பார்வை பற்றியும் பகிர்வது வழக்கம். தொடர்ந்து வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டம் அடைந்து வருவது குறித்து வருத்தம் தெரிவித்தார். இதற்கு இன்றைய விலைவாசி உயர்வு ஒரு காரணமாக இருந்தாலும் இதனை அனைவரும் ஒன்று திரண்டு சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

    English summary
    Darbar loss: distributors meet t.rajendar
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X