தர்பார் அப்டேட்: ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பாடல் காட்சி குஷியான ரஜினிகாந்த்

Recommended Video

Darbar Movie Update: ரஜினியையே “வாவ்” சொல்ல வைத்த யோகிபாபு- வீடியோ

சென்னை: ரஜினிகாந்த்தும் நயன்தாராவும் இணைந்து நடித்த ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப்பட்டதால் குஷியான ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் பாராட்டியுள்ளார்.

நம் எல்லோருக்கும் ஆண்டுதோறும் வயதும் கூடிக்கொண்டே போகிறது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மட்டும் இதில் உல்டா. இவருக்கு ஒவ்வொரு ஆண்டும் வயது குறைந்து இளமையாக மாறிக்கொண்டே வருவதாக தெரிகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையன்று வெளியான பேட்ட படம் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்ததோடு வசூலையும் வாரி வழங்கியது.

இளமையான ரஜினி

இளமையான ரஜினி

பேட்டை படத்தில் ரஜினியின் தோற்றம் சமீபத்திய படங்களில் இருந்ததைக் காட்டிலும் ஃபிரஸ்ஸாக, இளமையாக இருந்தது. இதுவும் இந்தப் படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாகும்.

தர்பார் கலக்கல்

தர்பார் கலக்கல்

தற்போது அதைவிட இன்னும் இளமையாக 20 வயது குறைந்தது போல் காட்சியளிக்கும் வகையில் ரஜினிகாந்த் நடித்து வரும் அடுத்த படம் தர்பார். அல்லி ராஜா, சுபாஷ்கரண் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் முதல் படம் இது.

ரஜினி நயன்தாரா

ரஜினி நயன்தாரா

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேர்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா. ரஜினிகாந்த்தும், நயன்தாராவும் இணைந்து நடித்தால் அந்தப் படம் நிச்சய வெற்றி என்பது ரசிகர்களின் அபார நம்பிக்கை.

ஹிட் லிஸ்ட் படங்கள்

ஹிட் லிஸ்ட் படங்கள்

ரஜினியும் நயன்தாராவும் முதன் முதலில் இணைந்து நடித்த சந்திரமுகி, சிவாஜி என இரண்டு படங்களும் மெகா ஹிட் படங்களாக அமைந்தன.
தற்போது நீண்ட நாட்களுக்கு பின்பு தர்பார் படத்தில் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். இதனால் இந்தப்படமும் நிச்சயம் வெற்றிப்பட வரிசையில் சேரும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

சுறுசுறுப்பான ரஜினி

சுறுசுறுப்பான ரஜினி

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று கொண்டிருக்கிறது. படத்தின் பாடல் காட்சிகள் நடைபெற்றுள்ளது. அதை குறித்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

ரஜினி பொங்கல்

ரஜினி பொங்கல்

அதில் ரஜினிகாந்த்-நயன்தாராவின் ஒரு பாடலுக்கான பெரிய காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தின் பெரிய ஹைலைட். இப்பாடலுக்கு மிக சிறப்பாக நடன காட்சிகள் அமைத்துள்ளதாக நடன பயிற்சியாளர் பிருந்தா தெரிவித்துள்ளார். இப்படம் 2020ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் பேட்ட படத்தை கொண்டாடி தீர்த்த அவருடைய ரசிகர் கூட்டம் தர்பார் படத்தின் வெளியீட்டையும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X