தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட இந்திய சூப்பர்ஸ்டார்கள்!

Recommended Video

Darbar Motion Poster | Rajinikanth | Subaskaran | A.R. Murugadoss | Anirudh Ravichander | Tamil

சென்னை: லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது இந்திய சூப்பர்ஸ்டார்களால் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள ரஜினிகாந்தின் தர்பார் படத்தில், நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தளபதி படத்தை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினிகாந்தை தனது லென்ஸ்களால் அழகாக படம் பிடித்து வருகிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். பேட்ட படத்தை தொடர்ந்து, மீண்டும் அனிருத்தின் இசையில் தர்பாரிலும் குத்தாட்டம் போடவுள்ளார் சூப்பர்ஸ்டார்.

தமிழில்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தின் தமிழ் மோஷன் போஸ்டரை இன்று பிறந்த நாள் கொண்டாடிவரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் நண்பர் ரஜினிகாந்த் அவர்களின் தர்பார் மோஷன் மோஷன் போஸ்டர் என குறிப்பிட்டிருந்தார்.

மலையாளத்தில்

மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லால், தனது நண்பரான ரஜினிகாந்த் அவர்களின் மோஷன் போஸ்டரின் மலையாள வெர்ஷனை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான எந்தவொரு ரஜினியின் திரைப்படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு இந்த தர்பார் மூலம் மலையாள திரையுலகிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கில்

செளத் இந்தியன் பிரின்ஸ் என அழைக்கப்படும் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் மகேஷ் பாபுவும் தற்போது, தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டரின் தெலுங்கு வெர்ஷனை வெளியிட்டுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடித்திருந்த நிலையில், தர்பார் பட மோஷன் போஸ்டரை மகேஷ் பாபுவை வைத்து ரிலீஸ் செய்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.

பாலிவுட்டில்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், ரஜினியின் தர்பார் மோஷன் போஸ்டரின் ஹிந்தி வெர்ஷனை வெளியிட்டுள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் தபங் 3 மற்றும் ராதே படத்தில் நடித்து வரும் சல்மான் கான், அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தின் டீசரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: darbar தர்பார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X