தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் இன்னொரு பிரபலம் யார் தெரியுமா?

சென்னை: லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியாகிறது.

தமிழில், இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நடிகர் கமல், தனது நீண்டகால நண்பர் ரஜினியின் தர்பார் போஸ்டரை வெளியிடுகிறார். அதே போன்று, மலையாளத்தில் மோகன் லாலும், இந்தியில் சல்மான் கானும் தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடுகின்றனர்.

Darbar Motion Poster Telugu Version released by Mahesh Babu

இந்நிலையில், தற்போது தெலுங்கில் தர்பார் போஸ்டரை வெளியிடும் அந்த பிரபலம் குறித்த அறிவிப்பை ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் படத்தின் நாயகன் மகேஷ் பாபு தான் தெலுங்கில் தர்பார் போஸ்டரை வெளியிடவுள்ள அந்த பிரபலம்.

இன்று மாலை 5.30 மணிக்கு தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு ரஜினியின் தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். துப்பாக்கி படத்திற்கு பிறகு மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X