நான்கு ஸ்டார் நடிகர்களால் வெளியிடப்படும் தமிழ் சூப்பர்ஸ்டாரின் "தர்பார்" மோஷன் போஸ்டர்
சென்னை : ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்து இருக்கும் சூப்பர் ஸ்டார் நடித்த "தர்பார்" படத்தின் மோஷன் டீஸர் இன்று மாலை 5.30 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. இதனை அந்தந்த மொழிகளின் பிரபலங்கள் வெளியிடவுள்ளனர்.
பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கும் தர்பார் திரைப்படத்தை பற்றின பல தகவல்கள் மற்றும் செய்திகள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டும் வண்ணமாக இருக்கையில் இந்த மோஷன் போஸ்டர் வெளியீடு அதுவும் நான்கு முக்கிய பிரபலங்களால் என்பது ரசிகர்களின் ஆர்வத்தையும் சந்தோஷத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்ட்டரை மற்ற மொழி சூப்பர் ஸ்டார்கள் திறந்து வைப்பது இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்துள்ளது.

பாலிவுட் கிங் சல்மான் கான் ஹிந்தியில் தர்பார் திரைப்படத்தின் போஸ்டரை இன்று வெளியிடுவது பாலிவுட் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.




Click it and Unblock the Notifications











