twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான்கு ஸ்டார் நடிகர்களால் வெளியிடப்படும் தமிழ் சூப்பர்ஸ்டாரின் "தர்பார்" மோஷன் போஸ்டர்

    |

    சென்னை : ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்து இருக்கும் சூப்பர் ஸ்டார் நடித்த "தர்பார்" படத்தின் மோஷன் டீஸர் இன்று மாலை 5.30 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. இதனை அந்தந்த மொழிகளின் பிரபலங்கள் வெளியிடவுள்ளனர்.

    பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கும் தர்பார் திரைப்படத்தை பற்றின பல தகவல்கள் மற்றும் செய்திகள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டும் வண்ணமாக இருக்கையில் இந்த மோஷன் போஸ்டர் வெளியீடு அதுவும் நான்கு முக்கிய பிரபலங்களால் என்பது ரசிகர்களின் ஆர்வத்தையும் சந்தோஷத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.

    Darbar motion poster to be released by in four languages
    இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் இந்த மோஷன் போஸ்டரை தமிழில் வெளியடவிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது பிறந்த நாள் அன்று இந்த மோஷன் போஸ்ட்டரை வெளியிடுவதில் கமல் மற்றும் Rajini ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

    தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்ட்டரை மற்ற மொழி சூப்பர் ஸ்டார்கள் திறந்து வைப்பது இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்துள்ளது.

    Darbar motion poster to be released by in four languages
    மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லால் அவர்கள் தனது நண்பரான ரஜினிகாந்த் அவர்களின் போஸ்டரை மலையாளத்தில் வெளியிடுகிறார்.

    பாலிவுட் கிங் சல்மான் கான் ஹிந்தியில் தர்பார் திரைப்படத்தின் போஸ்டரை இன்று வெளியிடுவது பாலிவுட் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

    Darbar motion poster to be released by in four languages
    தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் மகேஷ் பாபு தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை தெலுங்கில் வெளியிடவுள்ளார்.
    Darbar motion poster to be released by in four languages
    ஆக திரையுலகின் அனைத்து முக்கிய புள்ளிகளும் தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டில் பங்கேற்க உள்ளனர் என்பது கூடுதல் சந்தோஷம்.

    English summary
    Darbar motion poster of darbar movie is to be released today evening in four languages at 5.30 pm . four celebrities of four languages are releasing this poster. Kamalhassan in tamil, Mohanlal in Malayalam, Mahesh babu in telugu and Salman Khan in Hindi language are releasing this motion poster today evening.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X