இது தலைவர் தர்பார்.. இந்தியளவில் டிரெண்டாகும் தர்பார் திருவிழா!

Recommended Video

Darbar Motion Poster | Rajinikanth | Subaskaran | A.R. Murugadoss | Anirudh Ravichander | Tamil

சென்னை: இந்த பொங்கலுக்கு வெளியான பேட்ட படத்தை தொடர்ந்து அடுத்த பொங்கலுக்கு தர்பார் நடத்த ரெடியாகிவிட்டார் ரஜினி.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரஜினியின் மாஸ் காட்டும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் இந்தியளவில் டிரெண்டிங்கில் தெறிக்கவிட்டு வருகிறது.

காக்கிச்சட்டையில் ஆதித்ய அருணாச்சலமாக ரஜினி கம்பீரமாக அமர்ந்து கொடுக்கும் மாஸ் லுக்கை பார்த்து இந்திய திரையுலகமே ஆடிப்போயுள்ளது.

#DarbarMotionPoster, #DarbarThiruvizha, #DarbarPongal இந்தியளவில் டிரெண்டிங்கில் உள்ளது.

ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் சூப்பர்ஸ்டாரின் மாஸ் லுக்கை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

தர்பார் வில்லன்

தர்பார் படத்தின் வில்லனான சுனில் ஷெட்டி, தலைவா மறுபடியும் வருகிறார். அவருடன் இணைந்து நடித்தது எனது கனவு என்றும் தர்பார் படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாஸ் பொங்கல்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி படத்தில் காமெடியனாக நடித்த சதிஷ், 'தலைவா.. மாஸ் பொங்கல்' என பதிவிட்டுள்ளார்.

அனிருத் மேஜிக்

பாஃப்டா தனஞ்செயன், தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை ஷேர் செய்து, டோட்டல் மாஸ் மற்றும் ஏ.ஆர். முருகதாஸின் புத்திசாலித்தனம் என்றும் ரஜினி சார் சூப்பர் ஃபார்மில் உள்ளார் என்றும் புகழ்ந்துள்ளார். மேலும், அனிருத்தின் மேஜிக் இசை மோஷன் போஸ்டர் மற்றும் தர்பார் படத்துக்கு புதிய எனர்ஜியை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

ஹன்சிகா

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நாயகியாக நடித்து வரும் நடிகை ஹன்சிகா, சூப்பர்ஸ்டாரின் தர்பார் மோஷன் போஸ்டரை பார்த்து, Screamssss என பயங்கர சந்தோஷத்தை சத்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பூட் ஸ்டெப்

தலைவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர், தர்பார் மோஷன் போஸ்டரில் வரும் ரஜினியின் பூட் ஸ்டெப் காட்சியை ஸ்நாப் செய்து, பாட்ஷா, எந்திரன், 2.0 படங்களில் வரும் பூட் ஸ்டெப் காட்சியுடன் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X