ரஜினியின் தர்பார் இசை வெளியீடு.. நேரு அரங்கத்தில் கோலாகலம்.. கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: ரஜினியின் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் தர்பார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஆதித்ய அருணாச்சலம் என்ற பெயரில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

இசை அனிருத்

இசை அனிருத்

மேலும், யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அய்யப்பன் பாடல்

அய்யப்பன் பாடல்

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சும்மா கிழி சிங்கிள் டிராக் அண்மையிவ்ல வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் இந்த பாடல் ஐய்யப்பன் சாமி பாடல் என்றும் வேறு ஒரு பாடல் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

பொங்கல் விருந்து

பொங்கல் விருந்து

இதனிடையே படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டன. படம் வரும் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரு அரங்கம்

நேரு அரங்கம்

இந்நிலையில் இன்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.

பிரபலங்கள் பங்கேற்பு

பிரபலங்கள் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் பங்கேற்றிருக்கிறார். நடிகர் சுனில் ஷெட்டி மற்றும் லாரன்ஸ், விவேக், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், இயக்குநர் ஏஆர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் விவேக் உட்பட ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

பஞ்ச் டயலாக்குகள்

பஞ்ச் டயலாக்குகள்

தொடக்க நிகழ்ச்சியாக ரஜினியின் ஹிட் பாடல்கள் சில ஒளிபரப்பப்பட்டன. இதேபோல் ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளும் ஒளிப்பரப்பட்டன. முதல் நடன நிகழ்ச்சியாக ரோபோடா பாடலுக்கு நடனமாடப்பட்டது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X