உள்ளூர் டி.வியில் ஒளிபரப்பானது தர்பார்.. ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை : தர்பார் திரைப்படம் உள்ளூர் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டதை பார்த்த ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 9 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தர்பார். இப்படத்தை லைகா புரோடக்சன் சார்பில் சுபாஸ்கரன் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்து உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

படம் வெளியாவதற்கு முன்பே இப்படம் பல பிரச்சினைகளை சந்தித்தது. மலேசியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் பணம் பாக்கி என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் பின் அவ்வழக்கு பல தடைகள் தாண்டி முடிவுக்கு வந்தது.
Recommended Video
இதனை அடுத்து படம் வெளியாகி பல வசூல் சாதனை புரிந்தது. பலரும் விமர்சனம் செய்தனர் ஆனால் அதனை எல்லாம் தாண்டி ரஜினி என்னும் ஒரு பிம்பம் முன் அந்த விமர்சனம் எல்லாம் போய்த்து போனது. படம் இன்று வரை வசூலில் சக்கை போடு போடுகிறது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள ஒரு தனியார் உள்ளுர் தொலைக்காட்சியில் தர்பார் படம் திரையிடப்பட்டது. இது ரஜினி ரசிகர்களிடம் மற்றும் சினிமாதுறை பிரபலங்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டதுள்ளது.
சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரிக்கும் மாறு அதில் கூறியுள்ளனர்.எத்தனை வசதி வந்தாலும் என்ன நடந்தாலும் இது போன்ற செயலை கட்டுப்படுத்த முடியவில்லை.இதற்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் திரை ரசிகர்கள் பலர் இதற்கு ஆளும் அரசு அல்லது திரைதுறை சங்கங்கள் ஒரு தகுந்த முடிவு எடுக்கும் படி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











