Darbar: மும்பையில் அலப்பறையாக தர்பாரை துவங்கிய ரஜினி

By Siva

Recommended Video

Actor RajiniKanth: Thalivar 167: தர்பார் பூஜை புகைப்படங்கள்

மும்பை: ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் பூஜை இன்று மும்பையில் நடைபெற்றது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் படத்திற்கு தர்பார் என்று பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டனர். போஸ்டரிலேயே கதை மும்பையில் தான் நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது.

Darbar Pooja held in Mumbai

இந்நிலையில் தர்பார் படத்தின் பூஜை இன்று காலை மும்பையில் நடைபெற்றது. முருகதாஸ், ரஜினி, லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரண் ஆகியோர் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நீண்ட காலம் கழித்து ரஜினியை காக்கிச் சட்டையில் பார்க்கப் போகிறோம். படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப் போகிறாராம் முருகதாஸ். ரஜினி வரும் 18ம் தேதி மட்டும் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து வாக்களித்துவிட்டு திரும்பிச் செல்கிறாராம்.

Darbar Pooja held in Mumbai

ஸ்டுடியோவில் நடந்த தர்பார் போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே கசிந்துவிட்டன. அதனால் படப்பிடிப்பு தளத்தில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ரஜினி ரசிகர்கள் முருகதாஸுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதை தவிர கதை பற்றி மூச்சுவிடாமல் இருக்கிறார் முருகதாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X