அர்னால்டு படத்தில் இருந்து சுட்டதா Darbar போஸ்டர்?
Recommended Video

சென்னை:ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டதுதான் தர்பார் போஸ்டர் என்று நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தர்பார் என்று பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டர் மரண மாஸாக உள்ளதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர்.

இந்த போஸ்டரை பார்த்தால் எங்கிருந்தோ காப்பியடித்தது போன்று இருக்கே என்று நெட்டிசன்கள் தேடிப் பார்த்தால் அர்னால்டு நடித்த Killing Gunther போஸ்டரில் இருந்து சுடப்பட்டது தெரிய வந்துள்ளது.
அர்னால்டு பட போஸ்டரில் பட்டி, டிங்கரிங் செய்து ரஜினிக்கு வேறு கண்ணாடி போட்டுவிட்டு நமக்கு தர்பாராக கொடுத்துவிட்டார்கள். என்ன முருகதாஸ் சார், ஆரம்பமே காப்பியா?

அப்புறம் கதை என்னுடையது, தலைப்பு என்னுடையது என்று கூறி யாராவது வரப் போகிறார்கள். சூதானமாக இருந்து சொந்த சரக்கை பயன்படுத்துங்கள் என்று சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு முருகதாஸுக்கு புத்திமதி கூற ஆரம்பித்துவிட்டனர்.
சர்கார் போன்று பிரச்சனை எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











