நல்லவன், கெட்டவன், கேடுகெட்டவன்: நீயே முடிவு பண்ணிக்கோ- மிரட்டும் தர்பார்
Recommended Video

சென்னை: தர்பார் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தாலே கதை புரிகிறது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் படத்திற்கு தர்பார் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
போஸ்டரிலேயே கதை பற்றி படம் போட்டு காட்டியுள்ளார் முருகதாஸ்.

போலீஸ்
முருகதாஸ் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. அதை போஸ்டரில் உறுதி செய்துள்ளனர். போலீஸ் பெல்ட், தொப்பி, நாய், கை விலங்கு ஆகியவை ரஜினியின் வேலை என்னவென்பதை கூறுகின்றன.

ரஜினிகாந்த்
நான் நல்லவனாக அல்லது கெட்டவனாக அல்லது கேடுகெட்டவனாக இருப்பதை நீயே முடிவு செய் என்ற வாசகம் போஸ்டரில் உள்ளது. அப்படி என்றால் ரஜினி நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவனாக இருப்பார். பன்ச் வசனம் சூப்பருங்கோ.

பாட்ஷா
போஸ்டரில் இந்தியா கேட் புகைப்படம் உள்ளது. படம் மும்பை பின்னணியில் எடுக்கப்படக்கூடும். மும்பை என்றாலே எங்களுக்கு எல்லாம் பாட்ஷா பாய், காலாதான் நினைவுக்கு வருகிறார்கள். தர்பாரில் ரஜினி பாட்ஷாவாக இருந்தாலும் சரி, காலாவாக இருந்தாலும் சரி இல்லை இரண்டு பேரின் கலவையாக இருந்தாலும் சரி, ரசிகர்களுக்கு ஓகே தான்.

சம்பவம்
ரஜினியின் லுக் பேட்ட லுக் போன்றே உள்ளது. இருப்பினும் படத்தில் மேனரிசம் மூலம் மாஸ் காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். பேட்ட படத்தில் சிறப்பான தரமான சம்பவம் இருக்கு என்று கூறினார்கள். ஆனால் தர்பார் போஸ்டரை பார்த்தால் இந்த படத்தில் தான் சிறப்பான சம்பவம் இருக்கு போன்று. ரஜினியை போலீஸ் அதிகாரியாக பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டது. அதனால் தர்பாரை பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











