தர்பார் போஸ்டர் அர்னால்டு பட போஸ்டரின் காப்பியா?: டிசைனர் விளக்கம்

By Siva

சென்னை: தர்பார் பட போஸ்டர் ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்று எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. அர்னால்டு நடித்த ஹாலிவுட் படமான Killing Gunther போஸ்டரை காப்பியடித்து தர்பார் படத்திற்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நெட்டிசன்கள் காப்பி போஸ்டர் என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தனர்.

தர்பார்

தர்பார்

தர்பார் பட போஸ்டரை வின்சி ராஜ் டிசைன் செய்தார். அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, காலா, கபாலி ஆகிய படங்களை அடுத்து ரஜினிகாந்த் சார் படத்தில் 3வது முறையாக பணியாற்றுவதற்கு கொடுத்து வைத்துள்ளேன் என்றார்.

ரஜினி

ரஜினி

நான் சூப்பர் ஸ்டார் ரசிகன். அவர் பட போஸ்டரை டிசைன் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் பொறுப்புடன் தானே வேலை பார்ப்பேன். நான் நேர்மையாக உருவாக்கிய போஸ்டரை வேறு ஒரு போஸ்டரில் இருந்து காப்பியடித்தேன் என்று கூறுவது கவலை அளிக்கிறது என்று வின்சி ராஜ் தெரிவித்துள்ளார்.

அர்னால்டு படம்

அர்னால்டு படம்

அந்த ஹாலிவுட் பட போஸ்டரை நான் தற்போது தான் முதல் முறையாக பார்த்தேன். என் போஸ்டரை கலாய்ப்பவர்கள் ஹாலிவுட் போஸ்டருடன் ஒத்துப் போகும் வகையில் அதன் நிறத்தை மாற்றியுள்ளனர் என்கிறார் ராஜ்.

ஏ.ஆர். முருகதாஸ்

ஏ.ஆர். முருகதாஸ்

போஸ்டர் காப்பி என்று கலாய்த்தவர்கள் இது மட்டும் தானா இல்லை கதையுமா என்று கேலி செய்தார்கள். இந்நிலையில் வின்சி ராஜ் விளக்கம் அளித்துள்ளார். ரஜினி தற்போது மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X