இந்தியாவில் இல்லை.. ரஜினியின் தர்பார் முதலில் ரிலீசாவது எந்த நாட்டில் தெரியுமா?
சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் இந்தியாவில் ரிலீசாகும் முன்பே அமெரிக்காவில் ரிலீசாகிறது.
தர்பார் திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது.
ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் ஜனவரி 9ம் தேதி தர்பார் ரிலீசாகவுள்ள நிலையில், ஒரு நாள் முன்பே அமெரிக்காவில் வெளியாகிறது.

எத்தனை தியேட்டர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து, அமெரிக்காவில் சுமார் 250 க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் தர்பார் படம் திரையிடப்படுகிறது. மேலும், இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய மார்க்கெட்
தமிழ் சினிமா நடிகர்களிலேயே நடிகர் ரஜினிகாந்துக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளதாகவும், தர்பார் திரைப்படம் அமெரிக்காவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை வரும் பொங்கலுக்கு நடத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர பட்டாளம்
தர்பார் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான 'சும்மா கிழி' பாடல் மற்றும் தர்பார் டிரைலருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பு அமெரிக்க ரசிகர்களிடமும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பிரைம் மீடியா
வட அமெரிக்காவின் முன்னணி ஊடகமான பிரைம் மீடியா, கடந்த 10 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. வரும் பொங்கலுக்கு ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் இணைந்து வெளியிடுகின்றன.

அமெரிக்க ரசிகர்கள் குஷி
இந்தியாவுக்கு முன்னாடியே அமெரிக்காவில் ரஜினியின் தர்பார் படம் வெளியாகவுள்ளதால், அமெரிக்காவில் வாழும் ரஜினி ரசிகர்கள் பயங்கர குஷி ஆகியுள்ளனர். ரஜினியின் தர்பார் தரிசனத்தை தாங்கள் தான் முதலில் காணப்போகிறோம் என சமூக வலைதளத்தில் இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











