Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அசத்தலாய் வெளியான தர்பார் புரமோ.. அவங்க ரெண்டு பேரு மட்டும்தான்.. வயசே தெரியல.. ஒரே ரொமான்ஸ்தான்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் புரமோ வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கூட்டணி முதல் முறையாக இணைந்து உருவாகியிருக்கும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி நடித்துள்ளார்.
லைக்கா புரடெக்ஷன்
தர்பார் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். ரஜினியின் 167வது படமான இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
தர்பார் புரமோ
இந்தப் படம் உலகம் முழுவதும் வரும் 9-ம் தேதி முதல் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தர்பார் படத்தின் புரமோ இன்று வெளியானது.
நீங்க ரொம்ப...
ரஜினிகாந்த் - நயன்தாராவை மையப்படுத்தியே இந்தப் புரமோ உள்ளது. பின்னணி இசையுடன் காரில் இருந்து அட்டகாசமாய் இறங்கி வரும் ரஜினிகாந்த், நயன்தாராவிடம் நீங்க ரொம்ப... என எதையோ கூற வந்து தடுமாறுகிறார்.
திக்கி திணறும் ரஜினி
அதற்கு நயன்தாரா சாரி எனக்கு உருது தெரியாது என்று கூற மீண்டும் திக்கி திணறுகிறார் ரஜினி. அப்போது இவரை இஎன்டிக்கிட்ட கூட்டிக்கிட்டு போங்க என்று கூறி இடத்தை காலி செய்கிறார் நயன்தாரா. இப்படியாக இருவருக்கும் இடையேயான ரொமான்டிக் காட்சிகளுடன் உள்ளது இந்த புரமோ.
|
அள்ளும் லைக்ஸ்
இதனை படத்தின் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புரமோ லைக்ஸ்களை அள்ளி வருகிறது.