திரும்பவும் ‘மும்பை’க்கு பறந்த ரஜினி.. ஆனா இப்போ வேற லெவல்!

ரஜினியின் தர்பார் படம் மும்பை கதைக்களத்தில் உருவாகிறது.

Recommended Video

Darbar First Look | முருதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார்- வீடியோ

சென்னை: ரஜினி நடிக்கும் தர்பார் கதை மும்பை கதைக்களத்தைக் கொண்டது என பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிய வந்துள்ளது.

பேட்ட படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்திற்கு தர்பார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் மும்பை என்ற வார்த்தை மட்டும் தலைகீழாக எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்படத்தின் கதை மும்பையில் நடக்கிறது எனத் தெரிகிறது.

பாட்ஷா:

பாட்ஷா:

மும்பை கதைக்களம் ரஜினிக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே மும்பையை வைத்து அவர் நடித்த பாட்ஷா மற்றும் காலா என இரண்டு படங்களுமே சூப்பர்ஹிட். பாட்ஷாவில் அவர் மும்பையைக் கலக்கும் டான் ஆக நடித்திருந்தார்.

காலா தாதா:

காலா தாதா:

காலாவிலும் ஏறக்குறைய அதே போன்ற டான் கேரக்டர் தான். ஆனால், அதனை சற்று வேறு மாதிரி வித்தியாசமாக படமாக்கியிருந்தார் ரஞ்சித். ஆனால் மேற்கூறிய இரண்டு படங்களுமே ரஜினியை மாஸாக காட்டியது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

தர்பார் விருந்து:

தர்பார் விருந்து:

இந்நிலையில், தர்பார் படமும் மும்பையை கதைக்களமாகக் கொண்டது என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஆனால், முந்தைய படத்திலிருந்து வேறுபட்டு இதில் தாதாவாக அல்ல, போலீசாக நடித்திருக்கிறார் ரஜினி. எனவே, ரசிகர்களுக்கு முருகதாஸ் வேறு மாதிரி தாறுமாறு விருந்து படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் ரஜினி:

போலீஸ் ரஜினி:

அதேபோல், போலீஸ் வேடமும் ரஜினிக்கு பல வெற்றிகளைக் கொடுத்துள்ளது. மூன்று முகம், பாண்டியன் என ரஜினியின் போலீஸ் பட பட்டியலில் தற்போது தர்பாரும் சேர்ந்துள்ளது. பொங்கல் ரிலீசுக்காக ரசிகர்கள் இப்போதே கவுண்ட் டவுனை ஆரம்பித்து விட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X