கபாலிக்குப் பிறகு வானில் பறக்க வரும் தர்பார்.. ரஜினி ரசிகர்கள் குஷி

சென்னை : ரஜினியின் தர்பார் புகைபடத்தை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் விளம்பரப்படுத்தும் வேலை நடப்பது போல் உள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.

டிவிட்டரில் வலம் வந்து கொண்டிருக்கும் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ரஜினி ஓருவரால் மட்டுமே இதை சாதிக்க முடியும் என்று புகழ்ந்துள்ளனர்.

 Darbar ready to fly in the sky
ரஜினியால் மட்டுமே தமிழ் சினிமாவில் வசூல் சாதனை செய்ய முடியும். வேறும் வசூலில் மட்டும் இவர் சாதனை நின்றுவிடாவில் வானத்தையும் தொட்டுவிட்டது. இவரின் படங்கள் மட்டுமே விமானம், ஏர் பலூன் என விளம்பர படுத்தப்படுகிறது. ரஜினி ஒருவர் தான் பிளாக் அன்டு வோய்ட்டு , கலர், மோஷன் பிக்சர் மற்றும் 3டி போன்ற எல்லா விதமான படங்களில் நடித்து இருக்கும் நடிகர்.

தர்பார் ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா புரோடக்சன் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்து பொங்கல் இப்படம் வெளிவர உள்ளது. அதே போல பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் கபாலி இப்படத்தை கலைப்புலி.எஸ்.தானு தயாரித்தார். இப்படம் டிசர் தொடங்கி ரிலீஸ் ஆன பின்பும் பல சாதனைகளை செய்தது.

இப்படத்தின் விளம்பரத்திற்காக வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்து அது மலேசியா செல்லும் ஏர் ஆசியா விமானத்தில் ரஜினியின் கபாலி படத்தின் போஸ்டர்களை விமானம் முழுவதும் ஒட்டி தமிழ் சினிமாவில் யாரும் செய்யாததை செய்து காட்டினார்.

 Darbar ready to fly in the sky

இது போல தற்போது தர்பார் படத்தின் புரேமோஷனும் அது போலவே நடக்க போகிறது என பேசப்படுகிறது. டிவிட்டரில் வலம் வந்து கொண்டிருக்கிறது அப்புகைப்படம் ரஜினியின் தர்பார் புகைபடத்தை ஸ்பைஸ் ஜெட் எனும் விமானத்தில் ஒட்ட வேலை நடப்பது போல் உள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.

டிவிட்டரில் டிரென்டு ஆகும் புகைபடங்களை விமானங்களில் பறக்க விடுவார்கள் லைகா புரோடக்சன் என்று நம்பப்படுகிறது. இப் புகைப்படம் விமானத்தில் பறக்கும் என படக்குழுவினர் அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கி இருந்த படம் 2.0 இப்படத்தையும் லைகா நிறுவனமே தயாரித்தது. அப்படம் புரேமோஷனுக்காக ஏர் பலூனில் பெரியதாக பட போஸ்டர் வைத்து உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக படத்தை பிரபலபடுத்தினர் ஷங்கர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X