10 நாள் கொண்டாட்டம்.. ’தர்பார்’ பொங்கல் எப்போ தெரியுமா?
Recommended Video
சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படங்கள் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தன.
அதேபோல, வரும் பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் தர்பார் படம் மிகப்பெரிய வசூல் செய்ய லைகா நிறுவனம் மாஸ் ரிலீஸ் பிளான் ஒன்றை போட்டுள்ளது.

தர்பார்
லைகா நிறுவனம் தயாரிப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. ரொம்ப வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக தர்பார் படத்தில் நடித்துள்ளார். ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் மாஸ் காட்டிய ரஜினியின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஃபாஸ்ட்
அடுத்த மாதம் தனது 69வது பிறந்த நாளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாடவுள்ளார். இந்த வயதிலும், வெறும் 4 நாட்களில் தர்பார் படத்தின் டப்பிங்கை ஒரே மூச்சில் பேசி முடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அவரது இந்த சூப்பர் ஃபாஸ்ட் திறமையை கண்டு கோலிவுட் மட்டுமல்ல இந்திய திரையுலகமே ஆச்சர்யத்தில் இருக்கிறது.

தர்பார் பொங்கல்
2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி புதன் கிழமை வருகிறது. இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்னதாக ஜனவரி 9ம் தேதி வியாழக்கிழமையே ரஜினியின் தர்பார் படம் ரிலீசாகவுள்ளதாக லைகா நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளது. இதனால், 10 நாட்களுக்கு தர்பார் பொங்கல் திருவிழா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ஷ்டம்
சாதாரண பஸ் கண்டக்டர் தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டார் ஆவார் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். அது ரஜினியின் அதிர்ஷ்டம். அதே போல நாளையும் ஒரு மேஜிக் நடக்கும் என்றும், தமிழ்நாட்டின் முதல்வர் பதவியில் தான் அமரப்போவதை சூசகமாக நடிகர் கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் ரஜினி பேசியுள்ளது விவாத பொருளாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











