உலகம் முழுக்க ரிலீஸானது ரஜினியின் தர்பார்.. ஆட்டம் பாட்டம் என அதிகாலையிலேயே களைகட்டிய தியேட்டர்ஸ்!

Recommended Video

Darbar Movie Review by Anandhan | Rajinikanth | Nayanthara | AR Murugadoss | Filmibeat Tamil

சென்னை: ரஜினியின் தர்பார் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி முதல் முறையாக நடித்துள்ள படம் தர்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

ஆதித்ய அருணாச்சலம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

ரஜினிக்கு வில்லன்

ரஜினிக்கு வில்லன்

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தர்பார் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா, ஸ்ரீமண், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பிரமாண்ட வெளியீடு

பிரமாண்ட வெளியீடு

படத்தின் மோஷன் போஸ்டர், இசை வெளியிட்டு விழா, ட்ரெயிலர், புரமோ என அனைத்தும் பெரும் பிரமாண்டாக வெளியிடப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இன்று ரிலீஸ்

இன்று ரிலீஸ்

இந்நிலையில் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொங்கல் விருந்தாக பொங்கலுக்கு முன் இன்று வெளியாகியிருக்கிறது தர்பார்.

7 ஆயிரம் தியேட்டர்கள்

7 ஆயிரம் தியேட்டர்கள்

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள தர்பார் படம் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

சிறப்புக் காட்சி

சிறப்புக் காட்சி

தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் தர்பார் படம் காலை 4 மணிக்கே சிறப்பு காட்சியாக வெளியிடப்பட்டது. இதனை முன்னிட்டு திரையரங்குகளில் காத்திருந்த ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும் ரஜினிகாந்தின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் விமர்சையாக வரவேற்றனர்.

செம ஏற்பாடு

செம ஏற்பாடு

மேலும் மேளம் தாளம் தாரை தப்பட்டை என வாசித்து ஆட்டம் ஆடியும் பாட்டு பாடியும் தர்பாரை வரவேற்றனர். திரையரங்குகளில் விசில் அடித்தும் தலைவா என கத்தி ஆரவாரம் செய்தும் தர்பார் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

தர்பார் திருவிழா

தர்பார் திருவிழா

தர்பார் படத்தை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தர்பார் படத்தை முன்னிட்டு திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X