இது அன்பு சாம்ராஜ்யம்.. இனி தலைவரின் தர்பார் ஆரம்பம்.. 6 மில்லியன் வியூஸ் தாண்டிய ’சும்மா கிழி’!

Recommended Video

DARBAR Chumma Kizhi Lyric Video explained | Rajinikanth | A.R. Murugadoss | Anirudh | SPB

சென்னை: வரும் பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் தியேட்டர்களை ஆட்சி செய்யப் போகிறது. நேற்று வெளியான தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சும்மா கிழி' பாடல் 6 மில்லியன் வியூஸ் தாண்டி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இந்த சந்தோஷமான செய்தியை ராக்ஸ்டார் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் இனி தலைவரின் தர்பார் ஆரம்பம் என பதிவிட்டுள்ளார்.

நேற்று மாலை வெளியான சும்மா கிழி பாடலை ரசித்த பல பிரபலங்கள் அதுகுறித்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி வருகின்றனர்.

தர்பார்

தர்பார்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடிப்பில் தர்பார் படம் உருவாகியுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி தர்பார் திரையரங்குகளில் ஆட்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சும்மா கிழி

சும்மா கிழி

தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘சும்மா கிழி' நேற்று மாலை வெளியிடப்பட்டது. 73வயதிலும் எனர்ஜி குறையாமல் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ரஜினிக்கு இன்ட்ரோ பாடலை பாடியுள்ளது நிச்சயம் பாராட்டுக்குரியது. விவேக் வரிகளில் ‘கருப்புத் தோலோட சிங்கம் வரும் சீனோட' என ஒவ்வொரு வரிகளிலும் தலைவரிசம் தானாக தெரிகிறது.

டிரெண்டிங்

டிரெண்டிங்

யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் தர்பார் படத்தின் ‘சும்மா கிழி' பாடல் இடம்பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியான 'சும்மா கிழி' பாடல் ட்விட்டரில் நேற்று இந்தியளவில் டிரெண்டிங் ஆனது. ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் ரிப்பீட் மோடில் ‘சும்மா கிழி' பாடலை கேட்டு ரசித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் ட்வீட்

ரஜினியின் தீவிர ரசிகரான நடிகர் சிவகார்த்திகேயன், சும்மா கிழி பாடலின் இறுதியில் தியேட்டர்ல இது கிழி தான் என சூப்பர் ஸ்டார் சொன்ன வசனத்தை குறிப்பிட்டு, அனிருத், எஸ்.பி.பி., மற்றும் விவேக்குக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

தலைவரின் தர்பார் ஆரம்பம்

நடிகர் விஜய்க்கு சர்கார் அமைத்து கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு தர்பார் அமைத்து கொடுத்துள்ளார். நேற்று வெளியான சும்மா கிழி பாடல் இதுவரை 6 மில்லியன் ரியல் டைம் வியூக்களை தாண்டி சாதனை படைத்துள்ளது என்றும், இது அன்பு சாம்ராஜ்யம், இனி தலைவரின் தர்பார் ஆரம்பம், மிக்க நன்றி சும்மாகிழிச்சிஃபையிங் தி வியூஸ் என ராக்ஸ்டார் அனிருத் ட்வீட் செய்துள்ளார்.

More from Filmibeat

Read more about: darbar தர்பார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X