DarbarSecondLook: போடுறா வெடிய.. கொண்டாட்ட மோடில் ரஜினி ரசிகர்கள்.. 6 மணிக்கு தர்பார் செகண்ட் லுக்!

ரஜினியின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

Recommended Video

Darbar Movie Update: ரஜினியையே “வாவ்” சொல்ல வைத்த யோகிபாபு- வீடியோ

சென்னை: ரஜினியின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். காமெடி வேடத்தில் யோகி பாபுவும், ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸும் நடித்துள்ளனர்.

தர்பார் படத்தில் மும்பை போலீசாக ரஜினி நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் ரஜினியின் போலீஸ் கெட்டப் தான் வெளியிடப்பட்டது. ஆனால், அதில் பேட்ட பட லுக்கில் ரஜினி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

அதோடு, பர்ஸ்ட் லுக்கிற்காக நடத்தப்பட்ட போட்டோஷூட் இணையத்தில் லீக்கானதால், கடைசி நேரத்தில் இந்த போஸ்டர் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. அதனை உறுதி செய்வது போல் அந்த போஸ்டரில் பல குறைகள் காணப்பட்டன.

செகண்ட் லுக் போஸ்டர்

செகண்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில், ஓணம் பண்டிகையை ஒட்டி இன்று மாலை தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அப்படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா டிவிட்டரில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேட்ட படத்தில் வரும் ‘போட்றா வெடியா' டயலாக்கை பகிர்ந்து வருகின்றனர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ஓணம் விடுமுறையான இன்று பகலில் தூங்கலாம் எனப் பார்த்தால் தர்பார் அப்டேட் வந்து விட்டதே, இனி தூக்கம் வந்த மாதிரி தான் என செல்லமாக ஆதங்கப் பட்டுள்ளார் இந்த ரசிகர். இதே போல், மற்ற ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை பல்வேறு பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் டிசைன்

ரசிகர்கள் டிசைன்

ஏற்கனவே ரஜினியின் இரண்டு ஹெச்.டி. போஸ்டர்களை முருகதாஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அவற்றைக் கொண்டு ரசிகர்கள் சிறப்பான போஸ்டர்களை டிசைன் செய்ய வேண்டும் என்றும் ஒரு போட்டியை அவர் அறிவித்தார். ஒருவேளை ரசிகர்கள் டிசைன் செய்த போஸ்டரைத் தான் இன்று வெளியிடப்போகிறார்களா என்பது தெரியவில்லை.

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்

எனவே, ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக தர்பார் செகண்ட் லுக் போஸ்டரை எதிர்பார்த்துக் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். டிவிட்டரில் DarbarSecondLook என்ற ஹேஷ்டேக்கை வெளியிட்டு டிரெண்டிங்காக்கி வருகின்றனர். மாலையில் ரஜினி பட போஸ்டரைக் கொண்டாட இப்போதே ஆயத்தமாகி விட்டனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X