தர்பார் அப்டேட்: சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி... வைரலாகும் போட்டோக்கள்

Recommended Video

Darbar Movie Update: ரஜினியையே “வாவ்” சொல்ல வைத்த யோகிபாபு- வீடியோ

சென்னை: தர்பார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் நடிகர் ரஜினியும் பணிபுரியும் ஃபோட்டோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினி எந்திரன் திரைப்படத்திற்கு அப்பறம் நடித்த கபாலி, காலா, 2.0, ஆகிய திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு அவர் கடைசியாக நடித்த பேட்ட திரைப்படமும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த், பேட்ட படத்திற்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சுனில் ஷெட்டி, பிரதீக் பாபர் (Prateik Babbar), தாலிப் தஹில் (Dalip Tahil), குரு புல்லர் (Guru Bhullar) மற்றும் நடிகைகள் நயன்தாரா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

காக்கிச்சட்டை

காக்கிச்சட்டை

இத்திரைப்படத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு நடிகர் ரஜினி காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இதற்கு முன்பு 1992ஆம் ஆண்டில் வெளிவந்த பாண்டியன் படத்திலும், அதற்கு முன்பாக 1988ல் வெளிவந்த கொடி பறக்குது படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தற்போது தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

காவல்துறை அதிகாரி

காவல்துறை அதிகாரி

இதன் காரணமாகவே இப்படத்தின் மீது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றவாறே, ரஜினியின் தோற்றமும் இதற்கு முந்தைய படங்களில் இருந்ததைக் காட்டிலும் இருபது வயது குறைந்துள்ளது போல் மிக இளமையாக, சிவாஜி படத்தில் இருந்ததைப் போலவே மாறியுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

தர்பார் போட்டோக்கள்

தர்பார் போட்டோக்கள்

இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளும் வெளியில் வராமல் ரகசியம் காக்கப்படுகின்றன. அப்படி இருந்தாலும் அவ்வப்போது தர்பார் படத்தில் ரஜினி மற்றும் நயன்தாரா இடம்பெறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி விடுகிறது. இதைத் தடுக்க எவ்வளவோ முயன்றாலும் கூட எப்படியாவது வெளியாகிவிடுகிறது.

வைரல் போட்டோக்கள்

வைரல் போட்டோக்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி போலீஸ் யூனிஃபார்மிலும் அருகில் நயன்தாரா இருப்பது போலவும் ஒரு ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இப்போது இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் மறுபடியும் வெளியாகியது. அதில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் ரஜினின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பணிபுரியும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X