புல்லட் நம்பர் ஒன் ரெடியாம்.. நாளைக்கு முக்கிய அறிவிப்பு.. அனிருத் சூசகம்! #DarbarPongal
சென்னை: தர்பார் படம் குறித்து நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உருவாக்கி வரும் படம் தர்பார். இந்தப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி. ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா இந்தப்படத்தில் நடித்து வருகிறார்.

மோஷன் போஸ்டர்
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.

டப்பிங் போட்டோக்கள்
இதனை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். ரஜினி டப்பிங் பேசும் போட்டோக்களும் வெளியாகியிருந்தது.

முதல் புல்லட்
இந்நிலையில் தர்பார் படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவர் பதிவிட்டிருப்பதாவது, முதல் புல்லட் லோட் செய்யப்பட்டுவிட்டது. ஃபையர் பண்ண ரெடியாக உள்ளது. நாளை அறிவிப்புக்கு தயாராகுங்கள் என தெரிவித்துள்ளார்.

ஒரு தோட்ட லோடட்
மேலும் 6 தோட்டாக்கள் லோட் செய்யப்பட வேண்டிய துப்பாக்கியிலு ஒரு தோட்டா லோட் செய்யப்பட்டிருக்கும் தர்பார் போஸ்டரையும் ஷேர் செய்திருக்கிறார்.
லைகா தகவல்
இதனை பார்க்கும் போது தர்பார் படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது என்றும் அதில் ஒரு பாடல் நாளை வெளியிடப்படும் என்றும் தெரிகிறது. இதே அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனமும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

ஹேஷ்டேக் ட்ரென்ட்
இந்த அறிவிப்பை தொடர்ந்து #DarbarPongal என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். நாளை படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகவுள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் அதனை இப்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











