மரண மாஸை மிஞ்சியதா ‘சும்மா கிழி’.. தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி இருக்கு?

Recommended Video

DARBAR Chumma Kizhi Lyric Video explained | Rajinikanth | A.R. Murugadoss | Anirudh | SPB

சென்னை: தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சும்மா கிழி' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது தர்பார்.

பேட்ட படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில், வின்டேஜ் ரஜினி இன்ட்ரோ பாடல் போன்று 'சும்மா கிழி' பாடல் உருவாகியுள்ளது.

பிள்ளையார் சுழி

சும்மா கிழி என பாடலின் துவக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொல்லும் வசனத்துடன் பாடல் ஆரம்பிக்கிறது. இறுதியில் ரஜினிகாந்தின் அந்த காந்த சிரிப்புடன் பாடல் கலக்கலாக நிறைவடைகிறது.

எஸ்.பி.பி

எஸ்.பி.பி

நான் ஆட்டோக்காரன், ஒருவன் ஒருவன் முதலாளி, அதான்டா இதான்டா, தேவுடா தேவுடா, புதிய மனிதா பூமிக்கு வா, மரணம் மாசு மரணம் பாடல்களை பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சூப்பர்ஸ்டாருக்காக மீண்டும் ஒருமுறை இன்ட்ரோ பாடலை பாடி சும்மா கிழித்துள்ளார்.

அனிருத்

அனிருத்

பேட்ட படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினிக்காக தர்பார் படத்துக்கு பாடல் போட்டுள்ளார் அனிருத். மரண மாஸ் பாடலில் பாதியில் ரஜினி வரும் குரலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பாட வைத்திருந்த அனிருத், இந்த முறை முழு ஸ்பேஸையும் அவருக்கு விட்டுக் கொடுத்து விட்டு, இடையிடேயே வந்து கோரஸ் பாடி அசத்தியுள்ளார்.

விவேக் வரிகள்

ஆளப்போறான் தமிழன் என மெர்சலில் மெர்சல் காட்டிய விவேக், பிகிலில் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என வேற லெவல் லிரிக்ஸ் எழுதியிருந்தார். இந்நிலையில், தர்பார் படத்தின் ஓபனிங் பாடலான சும்மா கிழி பாடலுக்கு சூப்பர்ஸ்டாரின் ஸ்டார் வார்த்தை நீங்க கொடுத்த ஸ்டார் என எழுதி அசத்தியுள்ளார்.

ஆட்டோக்காரன் ட்யூன்

ஆட்டோக்காரன் ட்யூன்

பாட்ஷா படத்தில் வரும் நா ஆட்டோக்காரன் பாடல் ட்யூனில் சும்மா கிழி பாடல் ஆரம்பிக்க, என்னடா அனிருத் காப்பியடித்து விட்டாரா என எதிர்பார்த்த நிலையில், அதை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதற்காக முதலில் வைத்து விட்டு, பின்னர், அவருடைய கைவரிசையை காட்டியுள்ளார்.

மரண மாஸ் vs சும்மா கிழி

மரண மாஸ் vs சும்மா கிழி

பேட்ட படத்தில் அனிருத் இசையில் வெளியான மரண மாஸ் பாடலை சும்மா கிழி மிஞ்சியதா என்ற கேள்வி தான் தற்போது ரஜினி ரசிகர்களிடையே ஆர்வமாக கேட்கப்பட்டு வருகிறது. மரண மாஸ் பாடலில், கல்லூரி மாணவர்கள் ரஜினியை பார்த்து பாடுவார்கள். ஆனால், சும்மா கிழியில் தலைவரே நேரடியாக பாடி ஆடி கிழிக்க உள்ளதால், நிச்சயம் மரண மாஸை சும்மா கிழி கிழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X