சூப்பரா இருக்கு அய்யோ.. இது தியேட்டர்ல கிழிதான்.. சூப்பர்ஸ்டாரின் அந்த சிரிப்புக்கே பாட்டு ஹிட்!

Recommended Video

DARBAR Chumma Kizhi Lyric Video explained | Rajinikanth | A.R. Murugadoss | Anirudh | SPB

சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சும்மா கிழி' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ள 'சும்மா கிழி' பாடலில் ஆரம்பத்தில் அனிருத் ஸ்டுடியோவிற்கு ரஜினி நடந்து வரும் ஸ்டைலே தனி கெத்தாக இருக்கிறது.

நான் தான் டா இனிமேல் என்னோட தர்பாரு என எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலில் ஆரம்பிக்கும் 'சும்மா கிழி' பாடலும், பாடல் இறுதியில் அனிருத்துக்கு கை கொடுத்துவிட்டு சூப்பர்ஸ்டார் சொல்லும் அந்த வசனம் தான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இது தியேட்டர்ல சும்மா கிழி தான்

சும்மா கிழி பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ள நிலையில், சூப்பர்ஸ்டார் அனிருத் ஸ்டூடியோவில் வந்து பாடியதும், பாடல் முடிந்து, சூப்பர்டா அய்யோ இது தியேட்டர்ல கிழி தான் என இசையமைப்பாளர் அனிருத்துக்கு கைகொடுத்து உள்ளம் குளிர பாராட்டும் காட்சிகள் லிரிக் வீடியோ இறுதியில் இடம்பெற்று ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

டிரெண்டிங்

டிரெண்டிங்

சும்மா கிழி பாடல் வெளியாகும் முன்னதாகவே தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிள் பிளாஸ்ட் டுடே, தர்பார் சிங்கிள் ஹேஷ்டேகுகள் டிரெண்டிங்கில் இருந்தன. சும்மா கிழி பாடல் வெளியான நிலையில், அந்த ஹேஷ்டேகும் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, விஜய், அஜித் ரசிகர்களும் சும்மா கிழி பாடலை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மூன்று மொழிகள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் பொங்கலுக்கு ரிலிசாகிறது. தமிழில் சும்மா கிழி என்ற பாடல் வெளியாகியுள்ள நிலையில், தெலுங்கில் தும்மு தொலி என்றும் இந்தியில் நப்டே கிழி என்றும் தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மிரட்டி வருகிறது.

73 வயசுல எஸ்.பி.பி

தர்பார் ஓபனிங் பாடலான சும்மா கிழி பாடலை பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். 73 வயதில் இப்படி ஒரு எனர்ஜியில் சூப்பர்ஸ்டாருக்காக எஸ்.பி.பி பாடியது சிறப்புமிக்கது. அதுவும் அந்த பில்லா என்ற வார்த்தையை அதே ஸ்டைலில் அழுத்தி அவர் பாடும் போது செம்ம என பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர் புகழ்ந்துள்ளார்.

நெருப்பு பேரோட

நெருப்பு பேரோட நீ கொடுத்த ஸ்டாரோட இன்னிக்கும் ராஜா நான் கேட்டுப்பாரு சும்மா கிழி என பாடல் வரிகளை போட்டு, ராம் முத்துராம் சினிமாஸ் இப்போதே தலைவர் ரசிகர்கள் எங்கள் தியேட்டரில் தர்பார் ரிலீஸ் மறக்காம வந்துடுங்க என அழைப்பு விடுத்துள்ளது.

என்றும் தலைவரின் தர்பார்

தர்பார் படத்தின் ‘சும்மா கிழி' பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இசையமைப்பாளர் அனிருத், அன்றும் இன்றும் என்றும் தலைவரின் தர்பார், இந்த பொங்கல் தாரை தப்பட்ட கிழியட்டும் என ட்வீட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X