தர்பார், தளபதி 64, வலிமை, சூரரைப் போற்று, 2020ல் தமிழ் சினிமாவுக்கு காத்திருக்கிறது ஜாக்பாட்!

சென்னை: இந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெற்றியையும் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியையும் பெற்றுள்ளன.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அஜித், விஜய், தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தன.

அடுத்த ஆண்டும் முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசைக் கட்டி ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன.

2020ம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் படங்கள் என்ன என்ன என்பது குறித்து இங்கே காண்போம்.

தர்பார்

தர்பார்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தர்பார் டிரைலர் மற்றும் 'சும்மா கிழி' பாடல் வெளியாகி யூடியூபில் மிகப்பெரிய சாதனையையும் படைத்துள்ளது.

தளபதி 64

தளபதி 64

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வருகிறது தளபதி 64. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கைதி படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த நிலையில், தளபதி 64 படத்தின் வெளியீட்டுக்காகவும் தமிழ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

வலிமை

வலிமை

எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் 2020 தீபாவளிக்குத் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், வலிமை படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

சூரரைப் போற்று

சூரரைப் போற்று

நடிகர் சூர்யாவுக்கு 2019ல் என்.ஜி.கே., காப்பான் என இரு படங்கள் வெளியானாலும், விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு பதிவு செய்யவில்லை. இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் கோடை கொண்டாட்டமாக வரவுள்ள சூரரைப் போற்று படம் நிச்சயம் 2020ம் ஆண்டின் மிகப்பெரிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்ரா

கோப்ரா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், இர்ஃபான் பதான் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் டைட்டில் லுக் நேற்று வெளியானது. இந்த ஆண்டு வெளியான கடாரம் கொண்டான் படம் சியான் விக்ரமுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில், கோப்ரா நிச்சயம் மாஸ் ஹிட் கொடுக்கும் என தெரிகிறது.

தலைவர் 168

தலைவர் 168

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு நடிப்பில் பயங்கர ஸ்பீடில் உருவாகி வரும் தலைவர் 168 திரைப்படமும் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வாசம் படத்தை போல தலைவர் 168 படத்தையும் இயக்குநர் சிவா தெறிக்கவிடுவார் என நம்பலாம்.

கே.ஜி.எஃப் 2

கே.ஜி.எஃப் 2

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதன் இரண்டாம் பாகம் வரும் 2020ல் வெளியாகிறது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மேலும் மிரட்டும் என்றே தெரிகிறது.

ஆர்.ஆர்.ஆர்

ஆர்.ஆர்.ஆர்

ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், சமுத்திரகனி நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படமும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. பாகுபலி படத்தின் வெற்றியை ஆர்.ஆர்.ஆர் பீட் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு உலகளவில் எழுந்துள்ளது. ராஜமெளலி இந்த படத்தில் எந்த அளவுக்கு மேஜிக்கை செய்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மாஃபியா

மாஃபியா

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படமும் அடுத்த ஆண்டு வெளியாகிறது. துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் படம் என்பதால், மாஃபியா படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

பட்டாஸ்

பட்டாஸ்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், மெஹ்ரின் பிர்ஸடா, சிநேகா நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. சமீபத்தில் வெளியான மொரட்டு தமிழன் டா மற்றும் சில் ப்ரோ பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் நடிகர் தனுஷுக்கு சரவெடியாக இந்த பட்டாஸ் படத்தை கொடுப்பார் என தெரிகிறது.

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்

ஆர்.ஜே. பாலாஜி இயக்குநர் அவதார மெடுத்துள்ள மூக்குத்தி அம்மன் படமும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகிறது. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள இந்த படம் எல்.கே.ஜி படத்தை போல ஒரு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்த ஆண்டு அரை டஜன் படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி இருக்கின்றன. கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், தளபதி 64 இன்னும் சில படங்களும் விஜய்சேதுபதி லைன் அப்பில் இருக்கின்றன.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

இந்த ஆண்டு கோமாளி எனும் மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்த ஆண்டு, பூமி, ஜன கண மன உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. மேலும், பொன்னியின் செல்வன் படம் அடுத்த ஆண்டு வெளிவருமா அல்லது 2021ம் ஆண்டு வெளியாகுமா என்பது விரைவில் தெரியவரும்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

மேலும், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வாழ் படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. அருவி படம் ஏற்படுத்திய அலை மீண்டும் அடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் டாக்டர் படமும் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது. இது தவிற பல நல்ல படங்களும், வித்தியாசமான படைப்புகளும் அடுத்த ஆண்டு தமிழ் சினிமாவை எப்படி புரட்டி எடுக்கப் போகிறது என்பதை காண காத்திருப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X