twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லேட் ரிலீஸ்.. பிகில் லைக்ஸ் சாதனையை முறியடிக்க முடியாமல் தவிக்கும் தர்பார்?

    |

    சென்னை: தர்பார் டிரைலர் நேற்று வெளியாகி உலகளவில் டிரெண்டானது. 14 மணி நேரத்தில் தர்பார் டிரைலர் 6 மில்லியன் வியூஸ் தாண்டி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

    இன்னும் 10 மணி நேரத்தில் இன்னொரு 6 மில்லியன் வியூஸ்களை பெற்றால் தான் தர்பார் டிரைலர் விஸ்வாசம் டிரைலரின் 12 மில்லியன் வியூஸ்களையே வீழ்த்த முடியும்.

    மேலும், விஜய்யின் பிகில் படம் 24 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்குகளை பெற்று இந்தியளவில் முதலிடத்தில் உள்ளது.

    இதுவரை 5.5 லட்சம் லைக்குகளை பெற்றுள்ள தர்பார் டிரைலர் 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இருந்தாலும், பிகில் டிரைலர் படைத்த 2 மில்லியன் லைக்ஸ் சாதனையை தர்பார் முறியடிக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

    மாரி செல்வராஜ் தனுஷ் இணையும் புதிய கூட்டணி... நட்டியும் நடிக்கிறார்மாரி செல்வராஜ் தனுஷ் இணையும் புதிய கூட்டணி... நட்டியும் நடிக்கிறார்

    யூடியூபில் முதலிடம்

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. இதுவரை 6 மில்லியன் வியூஸ் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. 24 மணி நேரத்தில் தர்பார் டிரைலர் இன்னும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மூன்று மொழிகள்

    தர்பார் படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நேற்று வெளியானது. தமிழ் டிரைலர் 6 மில்லியன் வியூஸ் கடந்துள்ள நிலையில், இந்தி டிரைலர் 8 மில்லியன் வியூஸை நெருங்கி சாதனை படைத்து வருகிறது. மேலும், தெலுங்கு டிரைலர் 1.2 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. மலையாளத்தில் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், தர்பார் டிரைலர் மலையாளத்தில் இதுவரை வெளியாகவில்லை.

    பிகில் சாதனை

    பிகில் சாதனை

    இந்தியளவில் ஷாருக்கானின் ஜீரோ டிரைலர் 1.9 மில்லியன் லைக்ஸ் பெற்று முதலிடத்தில் இருந்தது. விஜய்யின் பிகில் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்ஸ் பெற்று அந்த சாதனையை உடைத்து முதலிடத்தில் உள்ளது.

    தர்பார் முறியடிக்குமா?

    தர்பார் முறியடிக்குமா?

    விஜய்யின் பிகில் படைத்த லைக்ஸ் சாதனையை தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளின் டிரைலர்களின் லைக்குகளை சேர்த்தால் கூட 24 மணி நேரத்தில் முறியடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான். இன்னும் 10 மணி நேரத்தில் தலைவரின் அற்புதம், அதிசயம் ஏதாவது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    லேட் ரிலீஸ் தான் காரணம்

    லேட் ரிலீஸ் தான் காரணம்

    நேற்று மாலை 6.30 மணிக்கு தர்பார் டிரைலர் வெளியாகும் என லைகா அறிவித்திருந்தது. ஆனால், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தர்பார் டிரைலர் வெளியாக தாமதம் ஆனதால், ரஜினி ரசிகர்கள், லைகாவை பயங்கரமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இந்த லேட் ரிலீஸ் தான் பெரிய அளவில் தர்பார் டிரைலர் சாதனைகளை முறியடிக்க முடியாமல் போனதாகவும் ரஜினி ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    English summary
    Super Star Rajinikanth’s Darbar trailer trending in youtube. But it can’t beat Thalapathy’s Bigil trailer likes record in 24 hours because of its late release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X