சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா!
சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் வரும் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.
சூப்பர்ஸ்டார் பிறந்த நாள் அன்று தர்பார் படத்தின் டீஸரையாவது லைகா நிறுவனம் வெளியிடும் என காத்திருந்த ரசிகர்கள்களுக்கு இறுதி வரை ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், டீஸர் என்ன டீஸர் டிரைலரையே விடுகிறோம் என லைகா நிறுவனம் மாஸ் அப்டேட்டை தற்போது வெளியிட்டு ரஜினி ரசிகர்களை வெறியேற்றியுள்ளது.
எப்போ ரிலீஸ்
வரும் திங்கட்கிழமை டிசம்பர் 16ம் தேதி மாலை 6.30 மணிக்கு தர்பார் படத்தின் டிரைலர் வெளியாகும் என லைகா நிறுவனமும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் அறிவித்துள்ளனர்.
இந்த அப்டேட் வந்ததில் இருந்து சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் ட்விட்டரில் தர்பார் டிரைலர் ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பஞ்ச் டயலாக் இருக்கும்ல
தர்பார் படத்தில் தலைவரின் என்ட்ரி இப்படித் தான் இருக்கும் என லைகா வெளியிட்ட தர்பார் படத்தின் போஸ்டரை போட்டு ட்வீட் போட்டுள்ள இந்த ரசிகர், பஞ்ச் டயலாக்கும் இருக்கும்ல கியாரே என பதிவிட்டுள்ளார்.
ஒன் மில்லியன் லைக்ஸ்
தர்பார் படத்தின் டிரைலர் வெளியானதும் அதனை வேற லெவலில் டிரெண்ட் செய்ய வேண்டும் என்றும் ஒரே நாளில் ஒரு மில்லியன் லைக்ஸ் விழ வேண்டும் எனவும் ரஜினி ரசிகர்கள் தங்களின் வெறித்தனத்தை இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க..
மரண வெயிட்டிங்
தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் வெளியானதும் அதனை மிகப்பெரிய அளவில் ஹிட் பாடலாக ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். இந்நிலையில், தர்பார் டிரைலருக்காக தெய்வமே மரண வெயிட்டிங் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.
தரமான சம்பவம்
லைகா நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு சிறப்பான தரமான சம்பவம் என பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ஸ்டைலாக ஆடி வரும் ஜிஃப் இமேஜை பதிவிட்டு இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











