Darbar update: முருகதாஸே ஓகே சொல்லிட்டாரு.. இனி தரமான சம்பவத்தை நீங்க செய்யலாம் ரசிகாஸ்.. !

தர்பார் படத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை: தர்பார் படத்தின் அதிகாரப்பூர்வ ஹெச்டி புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பேட்ட' படத்துக்கு பிறகு ரஜினி நடிக்கும் 'தர்பார்' படத்தில் அவருக்கும் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Darbar Update: The team is releasing the HD photos officially

தர்பாரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ரஜினி. இப்படத்தின் பார்ஸ்ட் லுக் வெளியாவதற்கு முன்பே படத்தின் புகைப்படங்கள் வெளியில் கசிந்தன. மும்பையில் நடக்கும் ஷூட்டிங் காட்சிகளும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு பெரும் தொல்லையாக அமைந்து வந்தது.

நேற்று கூட தர்பார் படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ்அப்பில் வேகமாக பரவின. இதை கட்டுப்படுத்த முடியாமல் படக்குழு திணறி வருகிறது.

இந்நிலையில் தர்பார் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் முருகதாஸ் காலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

Darbar Update: The team is releasing the HD photos officially

ஆனால், ஆறு மணிக்கு போஸ்டர்கள் எதையும் வெளியிடாத படக்குழு, 'தர்பார் படத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் 7 மணிக்கு வெளியிடப்படும்' என அறிவித்தது. கூடவே, அந்த போஸ்டர்களை வைத்து ரசிகர்கள் தங்கள் மனதுக்கு பிடித்தபடி தர்பார் போஸ்டர்களை உருவாக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது ரஜினியின் ஹெச்.டி புகைப்படங்கள் சிலவற்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படங்களை வைத்து ரசிகர்கள் போஸ்டர்களை உருவாக்கும் வேலையை ஆரம்பித்து விட்டனர். சிறந்த போஸ்டர்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X