தர்பார்: முருகதாஸ் சொன்ன ஸ்வீட் எடு கொண்டாடு நியூஸ்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

இன்று மாலை 6 மணிக்கு தர்பார் பட அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தர்பார் படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

பேட்ட' படத்துக்கு பிறகு ரஜினி நடிக்கும் 'தர்பார்' படத்தில் அவருக்கும் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Darbar update today at 6 PM: A.R.Murugadoss

தர்பாரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ரஜினி. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதற்கு முன்பே படத்தின் புகைப்படங்கள் வெளியில் கசிந்தன. மும்பையில் நடக்கும் ஷூட்டிங் காட்சிகளும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு பெரும் தொல்லையாக அமைந்து வந்தது.

நேற்று கூட தர்பார் படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ்அப்பில் வேகமாக பரவின. இதை கட்டுப்படுத்த முடியாமல் படக்குழு திணறி வருகிறது.

இந்நிலையில் தர்பார் படத்தின் முக்கிய அட்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

முருகதாசின் இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாலை 6 மணிக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். மரண மாஸ் அப்டேட்டுக்காக டைம் செட் செய்து காத்திருப்பதாக ரசிகர்கள் டிவீட் செய்து வருகின்றனர்.

படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீட்டு அறிவிப்பாக இருக்கலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஒருவேளை பாடல்கள் ரைட்ஸ் பற்றி ஏதாவது அப்டேட் கொடுத்து வெறுப்பேற்றி விடுவார்களோ என்ற பயமும் அவர்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X