தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி!

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, ஹாலிவுட் படமான ’கால் சென்டர்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

Recommended Video

Darbar Packup : படப்பிடிப்பு முடிந்தது It's Wrap

சென்னை: பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, ஹாலிவுட் படமான 'கால் சென்டர்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ரஜினியின் தர்பார் படத்தில் வில்லனாக சுனில் ஷெட்டி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டி, ஹாலிவுட்டில் நிஜ சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வரும் 'கால் சென்டர்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை அமெரிக்கரும் சீன வம்சாவளியை சேர்ந்தவருமான ஜெஃப்ரி சின் இயக்கி வருகிறார்.

கால் சென்டர் மோசடி

கால் சென்டர் மோசடி

'கால் சென்டர்' என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் கால் சென்டர் நடத்தும் பேரில் பல கோடி ரூபாயில் மோசடி செய்த கும்பலை கையும் களவுமாக அம்பலப்படுத்திய ஒரு போலீஸ் அதிகாரியின் நிஜ கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

சீக்கிய போலீஸ்

சீக்கிய போலீஸ்

நடிகர் சுனில் ஷெட்டி பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்கு இந்த படத்தின் மூலம் அப்டேட் ஆகியுள்ளார். இதில், கால் சென்டர் மோசடியை பிடித்த சீக்கிய அதிகாரியாக நடித்துள்ளார். கதையின் நாயகன் கதாபாத்திரம் கிடைத்ததால் சுனில் ஷெட்டி பயங்கர சந்தோஷத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

தர்பாரில் வில்லன்

தர்பாரில் வில்லன்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வரும் பொங்கல் விருந்தாக திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கும் தர்பார் படத்தில் சுனில் ஷெட்டி வில்லனாக நடித்து வருகிறார். மேலும், சமீபத்தில் வெளியான கிச்சா சுதிப்பின் பயில்வான் படத்திலும் சுனில் ஷெட்டி வில்லனாக நடித்திருந்தார்.

தமிழில் அறிமுகம்..

தமிழில் அறிமுகம்..

நடிகர் சுனில் ஷெட்டி, 2001ம் ஆண்டில் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் வெளியான 12 பி படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக அறிமுகமானார். ஷாம், சிம்ரன், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தில் ஜோதிகாவின் முறை மாமனாக சுனில் ஷெட்டி நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X