தர்பாரில் யூத்தாக மாறிய ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள்

Recommended Video

Darbar Packup : படப்பிடிப்பு முடிந்தது It's Wrap

சென்னை: தர்பார் ரொம்ப நல்லா வந்திருக்கு என்று ஸ்மார்ட்டாக கூறியுள்ளார் ரஜினிகாந்த். பேட்ட படம் கொடுத்த வெற்றி ரஜினிகாந்த்தை டபுள் உற்சாகத்துடன் நடிக்க வைத்துள்ளதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதனால் தானோ என்னவோ, தர்பார் படத்தில் பத்து பதினைந்து வயது குறைந்து விட்டது போல் துள்ளிக்குதித்து நடித்து வருகிறார்.

தர்பார் படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து அவர் நேற்று இரவு மும்பையிலிருந்து விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் பத்திரிக்கை நிரூபர்களிடம் பேசுகையில், தர்பார் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு என்று ஒரே வரியில் சொன்னதோடு முடித்துக்கொண்டார். இப்படம் ஜனவரி 2020ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Darbar movie is well taken-Rajinikanth

பேட்டை படத்திற்கு பின், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன் தயாரிக்க ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. பேட்ட படம் தந்த உற்சாகத்தில் இரண்டாவதாக தர்பாருக்கும் இசையமைக்கிறார் அனிருத்.

ரஜினிகாந்த் 27 வருடங்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதற்கு முன்பு 1992ஆம் ஆண்டில் வெளியான பாண்டியன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தர்பார் படத்திலும் கிட்டத்தட்ட, பாண்டியன் படத்தில் பார்த்த அதே சுறுசுறுப்புடன் காணப்படுகிறார் ரஜினிகாந்த். ஒரு வேளை போலீஸ் யூனிஃபார்ம் போட்டவுடனே அந்த சுறுசுறுப்பு வந்து ஒட்டிக்கொண்டதோ தெரியவில்லை.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் படு மாஸ்ஸான லுக்கிலும் அவருடன் தர்பார் திரைப்படத்தின் துணை இயக்குநர்கள் மற்றும் தொழிநுட்பக் கலைஞர்களும் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரரான ருத்ரா இந்த திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிகிறார். ரஜினிகாந்த்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், தற்போது மற்ற டெக்னீசியன்களுடன் ருத்ராவும் இணைந்து சூப்பர்ஸ்டாருடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இப்படம் ஜனவரி 2020ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் என்றாலே மாஸ் தான். அவரின் படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லாமலா இருக்கும். சமீப காலமாக ரஜினிகாந்த் படு யூத்தாக நடித்துவருவது அவரது ரசிகர்களின் குதூகலத்தை இரட்டிப்பாகியுள்ளது.

தற்போது, இந்த படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்த அவர் நேற்று இரவு மும்பையிலிருந்து விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், தர்பார் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு என்று உற்சாகத்தோடு சொன்னார். படத்தை பார்க்க ரசிகர்களும் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X