Darbar: மாஸ்.. கிளாஸ்.. வெறித்தனம்.. வாட் எ மேன்.. தலைவர் வாவ்.. செம மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்!

தர்பார் படத்தில் ரஜினியின் இரண்டு புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை: படக்குழு வெளியிட்டுள்ள தர்பார் பட போட்டோக்களில் ரஜினியின் ஸ்டைலைப் பார்த்து செம மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

பேட்ட படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தில் மீண்டும் போலீசாக நடித்து வருகிறார் அவர். இதனாலேயே படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது.

படக்குழுவுக்கு தெரியாமல், அடிக்கடி சில கறுப்பு ஆடுகள் தர்பார் படப்பிடிப்பு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றன.

ரஜினி படங்கள்:

இந்நிலையில் இன்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக ரஜினியின் ஹெச்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில் ஒன்றில் ரஜினி போலீஸ் கெட்டப்பில் கெத்தாக இருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் கோர்ட் சூட் எல்லாம் போட்டு, ரொமாண்டிக்காக இருக்கிறார். இப்படி இருவேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

வாவ் தலைவா:

ரஜினிக்கு திரைத்துறையிலும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜும். அவரும் தர்பார் புகைப்படத்தை பார்த்து, ‘வாவ் தலைவா' என டிவீட் வெளியிட்டுள்ளார்.

மாஸ்.. கிளாஸ்:

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாஸ்.. கிளாஸ் என இந்தப் புகைப்படங்களை அவர்கள் பாராட்டி வருகின்றனர். வெறித்தனமாக இதில் ரஜினி தோற்றமளிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

வாட் எ ஸ்டைல்:

‘வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. வாட் எ ஸ்டைல்... வாட் எ மேன்' என படையப்பா படத்தில் அப்பாஸ் ரேஞ்சுக்கு உணர்ச்சி வசப்பட்டுள்ளார் இந்த ரசிகர்.

ரசிகர்கள் திருப்தி:

இன்னைக்கு இந்த அப்டேட்ஸ் போதும் கண்ணுங்களா என இந்த இரண்டு போஸ்டர்களிலேயே ரஜினி ரசிகர்கள் திருப்தி அடைந்து விட்டனர். அதனை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

டிரெண்டிங்:

தற்போது வெளியிட்டுள்ள இந்த இரண்டு புகைப்படங்களை வைத்து போஸ்டர் ரெடி செய்யலாம் என தர்பார் படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், டிசைனிங் செய்யத் தெரியாதவர்கள் என்ன செய்வது என்ற குழப்பத்திலும், கவலையிலும் உள்ளனர். வேறென்ன டிசைனிங் தெரியலைண்ணா, போஸ்டர்ச டிரெண்டிங் பண்ண வேண்டியது தான் என தர்பார் போட்டோக்களை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X