காம சூத்ரா இயக்குநர் மீது செர்லின் சோப்ரா பாலியல் புகார்
காமசூத்ரா 3 டி இயக்குநர் ரூபேஷ் பவுல் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார் நடிகை செர்லின் சோப்ரா.
நடிகை செர்லின் சோப்ரா காம சூத்ரா 3டி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ருபேஸ் பவுல் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் ருபேஸ் பவுல் மீது செர்லின் சோப்ரா, மும்பை சாண்டாகுரூஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாலியல் தொந்தரவு
காமசூத்ரா 3டி படத்திற்கு ஒப்பந்தப்படி கொடுக்க வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடிப்பதாகவும், படத்தில் நடித்த போது தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக சாண்டகுரூஸ் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

ரூபேஷ் பால் மறுப்பு
ஆனால் செர்லினின் புகாருக்கு ரூபேஷ் பால் மறுப்பு தெரிவித்துள்ளார். காமசூத்ரா 3டி படத்தில் நடித்ததற்காக அவருக்கு 4 தவணைகளில் பணம் கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

பொய் சொல்கிறார்
தன்மீது செர்லின் கூறியுள்ள பாலியல் புகார் பொய்யானது என்றும் ரூபேஷ் பால் கூறியுள்ளார்.

நிர்வாண போட்டோக்கள்
செர்லின் சோப்ரா தன்னுடைய நிர்வான போட்டோக்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் அப்லோட் செய்துள்ளார். காமசூத்ரா 3 டி படத்தை புரமோட் செய்வதற்காக விலை உயர்ந்த நகைகள்,உடைகளை கேட்டார் அதை கொடுக்க மறுத்துவிட்டதற்காக இவ்வாறு புகார் கொடுத்துள்ளதாக கூறினார்.

விளம்பரத்திற்காகவா?
இந்த புகார் பாலிவுட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமசூத்ரா 3டி படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் இயக்குநரும், நடிகையும் போடும் நாடகமா? என்றும் கூட யோசிக்கின்றனர் சினிமா உலகினர்.


Click it and Unblock the Notifications











