twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குனருக்கு 'பளார்' விட்ட நடிகை சக ஊழியரின் ஏ.டி.எம். கார்டை திருடி சிக்கியவர்

    By Siva
    |

    மும்பை: இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை கீதிகா தியாகி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் வேலை பார்க்கையில் சக ஊழியரின் ஏடிஎம் கார்டை திருடி வேலையை பறிகொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

    சுபாஷ் கபூர் இயக்கத்தில் வெளியான இந்தி படம் ஜாலி எல்எல்பி. இதில் நாயகியாக நடித்த கீதிகா தியாகி படப்பிடிப்பின்போது சுபாஷ் தன்னிடம் தவறாக நடந்ததாக புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து கீதிகா சுபாஷின் கன்னத்தில் அறையும் வீடியோ யூடியூப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கீதிகா பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளன.

    செய்தி சேனல்

    செய்தி சேனல்

    கீதிகா கடந்த 2004ம் ஆண்டில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அப்போது அவர் இரவு 10 மணிக்கு வரும் செய்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

    திருட்டு

    திருட்டு

    செய்தி தொலைக்காட்சியில் தன்னுடன் வேலை பார்த்த செய்தி தொகுப்பாளரான ஷாசியா இல்மியின் ஏடிஎம் கார்டை கீதிகா திருடி அதில் இருந்து பணம் எடுத்து செலவு செய்துள்ளார்.

    ஒரே மேக்கப் அறை

    ஒரே மேக்கப் அறை

    கீதிகாவும், ஷாசியாவும் ஒரே மேக்கப் அறையை பயன்படுத்தியதால் ஏடிஎம் கார்டை திருடுவது அவருக்கு எளிதாக இருந்துள்ளது என்று ஷாசியாவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

    புகார்

    புகார்

    தனது ஏடிஎம் கார்டு திருடப்பட்டு பணம் எடுக்கப்பட்டது குறித்து ஷாசியா தொலைக்காட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார். இதையடுத்து கீதிகாவை அழைத்து கேட்டதற்கு தான் திருடவே இல்லை என்று சாதித்துள்ளார்.

    டிஸ்மிஸ்

    டிஸ்மிஸ்

    சிசிடிவி கேமராவில் கீதிகா ஏடிஎம் கார்டை திருடிய காட்சியை அவரிடம் போட்டுக் காண்பித்தனர். அதன் பிறகு கீதிகா வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

    ஷாசியா

    ஷாசியா

    ஷாசியா தற்போது ஆம் ஆத்மி கட்சி உறுப்பினராக உள்ளார். அவரை ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட வைக்க கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். கீதிகா கார்டை திருடிய விவகாரத்தை ஷாசியா உறுதிபடுத்தியுள்ளார்.

    Read more about: theft fired atm
    English summary
    According to a report actress Gethika Tyagi who accused director Subhash Kapoor of molestation got fired from a news anchor job for stealing fellow anchor's ATM card.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X