ஜி.வி. பிரகாஷின் 'டார்லிங்' ஏன் ஹிட்டாகக்கூடும் தெரியுமா?
சென்னை: ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள டார்லிங் படத்தின் இசை சூர்யன் எப்.எம்.மில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பென்சில் படம் மூலம் ஹீரோவானார். அந்த படம் இழுத்துக் கொண்டிருக்கிற வேலையில் ஞானவேல்ராஜா, அல்லு அர்ஜுன் தயாரிப்பில் டார்லிங் என்ற பேய் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜி.வி.
டார்லிங்கில் ஜி.வி. ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

இசை வெளியீடு
கோலிவுட்டில் பிரமாண்டமாக இசையை வெளியிடுகையில் டார்லிங் படத்தின் இசையை சூரியன் எப்.எம்.மில் புதன்கிழமை வெளியிட்டுள்ளனர்.

பிரகாஷ்
இசை வெளியீட்டு விழாவில் ஜி.வி. பிரகாஷ், நிக்கி, கானா பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேய் டிரெண்ட்
கோலிவுட் ரசிகர்கள் அண்மை காலமாக பேய் படங்களை விரும்புகின்றனர். இந்நிலையில் அடுத்த மாதம் வெளியாகும் டார்லிங் படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

அல்லு அரவிந்த்
தெலுங்கு தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் பல ஆண்டுகள் கழித்து தமிழ் படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











