மிரட்டலான பேய் அனுபவம்... 7 ஆண்டுகளை கடந்த டார்லிங் படம்

சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஷ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2015ல் வெளியான படம் டார்லிங்

இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷுக்கு சிறப்பான நடிகர் என்ற அங்கீகாரத்தை இந்தப் படம் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

டார்லிங் படம்

டார்லிங் படம்

நடிகர் ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஷ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2015 ஜனவரி 15ம் தேதி வெளியான படம் டார்லிங். இசை அசுரன் என்ற பெயரை பெற்றுள்ள ஜிவி பிரகாஷுக்கு நடிக்கவும் தெரியும் என்பதை இந்தப் படம் நிரூபித்தது.

மாறுபட்ட கதைச்சூழல்

மாறுபட்ட கதைச்சூழல்

தொடர்ந்து தற்போது அவர் பல்வேறு கதைக்களங்களில் நடித்து வருகிறார் என்றாலும், முன்னதாக சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்துவந்த அவருக்கு மாறுபட்ட கதை சூழலை இந்தப் படம் ஏற்படுத்தி கொடுத்தது. காதல் தோல்வி, புதிய காதல், பேய் என அவரது வித்தியாசமான நடிப்பை படத்தில் காண முடிந்தது.

அழுத்தமான கேரக்டர்

அழுத்தமான கேரக்டர்

படத்தில் தற்கொலைக்கு தயாராகும் இளைஞனின் கேரக்டரை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருந்தார் ஜிவி. தொடர்ந்து அவர் தற்போது சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு இந்தப் படம் முன்னோட்டமாக அமைந்தது.

சிறப்பான திரைக்கதை

சிறப்பான திரைக்கதை

நிக்கி கல்ராணியின் நடிப்பும் படத்தில் பேசப்பட்டது. அறிமுக இயக்குநர் சாம் ஆண்டன், படத்தில் பேயை வைத்தும், அதன் பின்னணியை வைத்தும் சிறப்பான கதையை கொடுத்திருந்தார். படத்தில் ஜிவி பிரகாஷின் இசையமைப்பில் பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றன.

7 ஆண்டுகள் நிறைவு

7 ஆண்டுகள் நிறைவு

இந்நிலையில் படம் வெளியாகி 7 ஆண்டுகள் கடந்ததை தற்போது படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் சாம் ஆண்டன் தற்போது இதன் நினைவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ரசிகர்களின் அன்புக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் குஷி பதிவு

இயக்குநர் குஷி பதிவு

மேலும் ஜிவி, நிக்கி கல்ராணி, பாலா மற்றும் கருணாஸ் இணைந்துள்ள புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 7 ஆண்டுகள் டார்லிங் படம் என்று பதிவு செய்துள்ள அவர், படத்தை தயாரித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X