Dasara Box Office: பத்து தல, விடுதலை படங்களுக்கு விபூதி அடித்த தசரா... நானியின் வசூல் வேட்டை!

ஹைதராபாத்: தெலுங்கில் நானி நடித்துள்ள தசரா திரைப்படம் கடந்த வாரம் 30ம் தேதி வெளியானது.

நானி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார்.

தமிழில் சிம்புவின் பத்து தல, வெற்றிமாறனின் விடுதலை படங்களுடன் நானியின் தசராவும் கடந்த வாரம் வெளியாகின.

இந்நிலையில், பத்து தல, விடுதலை படங்களை விட பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்துள்ளது தசரா திரைப்படம்.

தசரா பாக்ஸ் ஆபிஸ்
தெலுங்கில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தசரா திரைப்படம் கடந்த வாரம் 30ம் தேதி வெளியானது. நானி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். புஷ்பா, கேஜிஃஎப் படங்களின் சாயலோடு வெளியான தசரா, டோலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சில நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தூள் பறத்தியுள்ளது.

 Dasara Box Office: Nani Keerthy Suresh starrer Dasara film has collected Rs 100 crore

அதன்படி, ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நானியின் ஆக்‌ஷன் ட்ரீட் செம்மையாக ஒர்க் அவுட் ஆனதால், முதல் வாரமே ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரம் தமிழில் பத்து தல, விடுதலை திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. சிம்புவின் பத்து தல படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதோடு, பாக்ஸ் ஆபிஸில் இன்னும் 50 கோடி கூட வசூலிக்கவில்லை.

அதேபோல், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இருந்தாலும் இந்தப் படத்தின் வசூலும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றே தெரிகிறது. ஆனால், பக்கா கமர்சியல் படமாக வெளியாகியுள்ள நானியின் தசரா, அசால்ட்டாக 100 கோடி வசூலை கடந்துள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பு இருப்பதால், வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்தப் படத்தை இயக்குநர் ராஜமெளலி பார்த்துவிட்டு பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதில், ராவான கேரக்டர்கள், இயல்பான நிலப்பரப்பு ஆகியவற்றுடன் மனதைத் தொடும் காதல் காட்சிகளால் மனதை ஈர்த்துள்ளார் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா. அதேபோல், இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார் நானி. கீர்த்தியும் தனது கேரக்டரை வெகு இயல்பாக ஏற்று நடித்துள்ளார். அனைத்து நடிகர்களும் கவனம் ஈர்த்தனர். ஒளிப்பதிவு முதல் தரம், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை சிறப்பு. தசரா குழுவுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

 Dasara Box Office: Nani Keerthy Suresh starrer Dasara film has collected Rs 100 crore
தொடர்ச்சியாக தெலுங்கு படங்கள் மிக எளிதாக 100 கோடி ரூபாய் வசூலித்து வருகின்றன. இதனால், அடுத்தடுத்து வெளியாகவுள்ள தெலுங்கு படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. நானியின் தசரா படத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திகனி, சாய்குமார், பூர்ணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். முக்கியமாக இந்தப் படத்தில் இடம்பெற்ற மைனர் வேட்டிக் கட்டி உள்ளிட்ட பாடல்கள் செம்ம ஹிட் அடித்தன. அதேபோல், சுவரில் வரையப்பட்டிருந்த சில்க் ஸ்மிதாவின் ஓவியமும் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X