Dasara Twitter Review: புஷ்பா அல்லு அர்ஜுனை மிஞ்சினாரா நானி.. தசரா படம் எப்படி இருக்கு?

சென்னை: இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெல்லா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள தசரா திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி உள்ளது.

தசரா படத்தில் உள்ள நானியின் லுக்கை பார்த்த ரசிகர்கள் அந்த படத்தை அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்துடன் கம்பேர் செய்து வந்தனர்.

இந்நிலையில், தசரா திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அல்லு அர்ஜுன் நடிப்பை நேச்சுரல் ஸ்டார் நானி தூக்கி சாப்பிட்டாரா? இல்லை தசரா படம் தனித்துவமாக ஹிட் அடித்துள்ளதா என்பது குறித்து ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனங்களை இங்கே பார்ப்போம் வாங்க..

தசரா

தசரா

அக்டோபர் மாதம் வர வேண்டிய தசராவை மார்ச் மாதத்துக்கே கொண்டு வந்து இருக்கிறார் நானி. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளதாக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெல்லா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார். இந்த படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் அசத்தி உள்ளார்.

ஹவுஸ்ஃபுல்

ஹவுஸ்ஃபுல்

திரையிட்ட இடங்களில் எல்லாம் தசரா திரைப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக தியேட்டர்களை தெறிக்கவிட்டு வருவதாக நானி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் #Dasara ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். நானி இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

செகண்ட் ஹாஃப் சொதப்பல்

செகண்ட் ஹாஃப் சொதப்பல்

நானியின் தசரா திரைப்படம் முதல் பாதி சூப்பராக இருந்த நிலையில், இரண்டாம் பாதியில் அந்த டெம்போ மெயின்டெயின் ஆகவில்லை. ஆனால், கடைசியில் கிளைமேக்ஸில் இயக்குநர் படத்தை தூக்கி நிறுத்தி விட்டார். அபவ் ஆவரேஜ் படம் என்றாலும், கமர்ஷியல் ஹிட் கன்ஃபார்ம் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

தெலுங்கானா பிரைடு

தெலுங்கானா பிரைடு

தெலுங்கானாவின் பிரைடு இந்த படம் என சில்க் ஸ்மிதா போஸ்டர் பக்கத்தில் நானி இருக்கும் ஸ்டில்லை போட்டு ரசிகர்கள் தசரா படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். கிளைமேக்ஸ் காட்சியில் நானி நடித்திருக்கும் நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருது உறுதி என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டெரிஃபிக் சீன்

டெரிஃபிக் சீன்

இந்திய சினிமாவிலேயே ஒன் ஆஃப் தி டெரிஃபிக் சீன் இது என எரிந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே நானி நிற்கும் படக்காட்சியை பகிர்ந்து ரசிகர்கள் தசரா படம் தாறுமாறா ஹிட் அடிக்கும், மிகப்பெரிய பிளாக்பஸ்டர் லோடிங் என கொண்டாடி வருகின்றனர்.

புஷ்பாவை மிஞ்சியதா

புஷ்பாவை மிஞ்சியதா

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் வசூலை நானியின் தசரா முறியடிக்கும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அதே சமயம், புஷ்பா தான் பெஸ்ட் என அல்லு அர்ஜுன் ரசிகர்கள் நானியின் தசரா படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். இரண்டும் வேறு வேறு கதை படங்கள், இரண்டு நடிகர்களுமே பெரும் உழைப்பை தங்கள் படத்துக்காக போட்டுள்ளனர் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X