என்னங்க சொல்றீங்க.. தசாவதாரம் வந்து 13 வருஷமாச்சா.. மறக்க முடியாத கமல்!

சென்னை : தசவதாரம் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளானதை கமல் நினைவு கூர்ந்துள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தசவதாரம்.

இந்த திரைப்படத்தில் கமல் 10 கெட்டப்பில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக அசின் மற்றும் மல்லிகா ஷெராவத் ஆகியோர் நடித்திருந்தனர்.

13 ஆண்டுகள் நிறைவு

13 ஆண்டுகள் நிறைவு

கி.பி.12ம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் இருந்துபெருமாளைக் காப்பாற்ற முடியாமல் கடலுக்குள் மடிகிறார் வைணவக் கமல் அங்கிருந்து கதை தொடங்கி, கி.பி.21ம் நூற்றாண்டில் அமெரிக்க விஞ்ஞானியான கமலின் உயிர்கொல்லி கிருமி கண்டுபிடிப்பில் தொடர்பு படுத்தப்படுகிறது கதை.

சுனாமியால் அழிகிறது

சுனாமியால் அழிகிறது

உயிரில் அழிவை ஏற்படுத்தும் இந்த உயிர்கொல்லி பல இடத்தில் கைமாறி இறுதியாக இந்தியாவிற்கு வந்து விடுகிறது. இந்த அழிவிலிருந்து உலகை காப்பாற்ற விஞ்ஞானி கமல் பாடுபடுகிறார். இறுதியில் சுனாமி அந்த கிருமியை அழிக்கிறது இதுதான் கதையின் சாரம்.

10 அவதாரம்

10 அவதாரம்

ரங்கராஜன் நம்பி,கோவிந்த ராமசாமி, பல்ராம் நாயுடு, கிருஷ்ணவேணி, வின்செட் பூவராகன்,ஜார்ஜ் புஷ் என பத்து கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கமல். இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெற்று பெற்றது. இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்ற பாடல்களாக இருந்தன. குறிப்பாக உலகநாயகனே பாடல் கமல்ஹாசனை கொண்டாடும் பாடலாக இருந்தது.

Recommended Video

Top 5 Beats: பிக் பாஸ் 5ல் கமலுக்கு சம்பளம் இவ்வளவா? கொடி கட்டிப் பறக்கும் நயன்தாராவின் மார்க்கெட்!
நினைவு கூர்ந்தார்

நினைவு கூர்ந்தார்

இந்நிலையில், கமல்ஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தசவாதாரம் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆவதை நினைவு கூர்ந்துள்ளார். படத்தின் மேம்பாட்டிற்காக பணியாற்றிய படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்

நடித்து வருகிறார்

நடித்து வருகிறார்

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், மற்றும் அந்தோணி வர்கீஸ் ஆகியோரும் உள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார், இது தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X