செல்ல மகள் லாலா உடன்.. மகள் தினம் கொண்டாடிய நடன இயக்குனர்.. வைரலாகும் க்யூட்டான புகைப்படம்!
சென்னை : கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு நடன இயக்குனராக பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வருபவர் நடன இயக்குனர் சாண்டி.
மானாட மயிலாட, கிங்ஸ் ஆப் டான்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், ஜட்ஜாகவும் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களமிறங்கி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் "டாட்டர்ஸ் டே" நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் தனது செல்ல மகள் லாலாவுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களின் அன்பை அள்ளி வருகிறார்.

அதிகாரப்பூர்வமாக
தமிழ் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பிக் பாஸ் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 4ன் ப்ரோமோ வீடியோ பலரையும் கவர்ந்து இன்னும் ஓரிரு வாரங்களிலேயே நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க பட்டுள்ளது.

நடனத்துடன் ப்ரோமோ
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பல்வேறு பிரபலமான நடிகர் நடிகைகள் போட்டியாளராக பங்கேற்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 4-ன் சமீபத்திய ப்ரோமோ வீடியோவில் கமல்ஹாசன் செம ஸ்டைலில் கம்பீரமான நடிப்பில் தோன்றியிருக்க இதுவரை இல்லாத அளவிற்கு நடனத்துடன் வெளியாகி இருந்த அந்த ப்ரோமோ வீடியோ பலரையும் கவர்ந்த நிலையில் அதற்கு சாண்டி கோரியோகிராபி செய்துள்ளார்.

ரன்னர் அப்
காலா, பாகுபலி உள்ளிட்ட மிகப்பெரிய திரைப்படங்களுக்கும் கோரியோகிராபி செய்திருக்கும் சாண்டி சென்ற ஆண்டு வெளியான பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு தனது சிரிக்க வைக்கும் நகைச்சுவையின் மூலமும் அசரவைக்கும் நடனத்தின் மூலமும் தமிழ் மக்கள் அனைவரையும் கவர்ந்ததோடு "ரன்னர் அப்" ஆக மகுடம் சூடினார்.

போட்டோஷூட்
இவ்வாறு ஒரு புறம் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பணியாற்றிவரும் சாண்டி லாக்டவுனில் பலரும் பார்த்திராத அளவிற்கு பல்வேறு விதமான ஸ்டைலிஷான லுக்கில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திருந்த நிலையில் இப்பொழுது மகளுடன் "டாட்டர்ஸ் டே" கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

செல்ல மகள் லாலாவுடன்
செப்டம்பர் 27 உலகம் முழுவதும் "டாட்டர்ஸ் டே" மிகப் பிரபலமாக கொண்டாடப்படுவதையொட்டி பிரபலங்கள் பலரும் தங்கள் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடி வந்தனர். இந்நிலையில் நடன இயக்குனர் சாண்டியும் தனது செல்ல மகள் லாலாவுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் க்யூட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு "டாட்டர்ஸ் டே" வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











