ஸ்ரீ லீலாவுக்கே இத்தனை கோடி கொடுக்கமாட்டாங்களே.. ராபின்ஹுட் படத்தில் டேவிட் வார்னர் சம்பளம் இவ்வளவா?

ஹைதராபாத்: ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்துள்ள நிலையில், இந்த முறையும் டேவிட் வார்னரின் வாணவேடிக்கைகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி டோலிவுட்டில் அவர் நடிகராகவும் மாறியுள்ள நிலையில், இந்த மாதம் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா என்கின்றனர். ராபின்ஹுட் படமென்றால் கூட ரசிகர்களுக்கு சரியாக புரியுமா என்பது சந்தேகம் தான். அதீத சர்ப்ரைஸ் என கெத்திகா ஷர்மா நடனமாடிய பாடல் இடம்பெற்ற படத்தில் தான் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் சினிமாவிலும் ஆர்வம் செலுத்தி நடித்துள்ளனர். லாஸ்லியா, அர்ஜுன் நடிப்பில் வெளியான பிரெண்ட்ஷிப் படத்தின் மூலம் சுழல் பந்து வீச்சாரளர் ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார்.

David Warner receives huge pay check for Sreeleela and Nithin starrer Robinhood movie

எம்.எஸ். தோனி பயோபிக் படம் உருவானது. மேலும், கோலிவுட்டில் எல்ஜிஎம் எனும் படத்தை ஹரிஷ் கல்யாணை வைத்து தயாரித்தார். பல கிரிக்கெட் வீரர்களும் விளம்பர படங்களில் நடித்து வருகின்றனர்.

அனிமலாக மாறிய தோனி: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற அனிமல் படத்தை அப்படியே காப்பி கேட் செய்து சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் தோனியை வைத்து சமீபத்தில் வெளியான விளம்பரப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து டிரெண்டாகி வருகிறது. தோனி தொடர்ந்து பல விளம்பரப்படங்களில் சூப்பராக நடித்து வரும் நிலையில், அவர் சினிமாவிலும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ராபின்ஹுட்டில் டேவிட் வார்னர்: நிதின், ஸ்ரீ லீலா நடிப்பில் உருவாகியுள்ள ராபின்ஹுட் திரைப்படம் அடுத்த வாரம் மார்ச் 28ம் தேதி வெளியாகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படமும் இந்தியில் சல்மான் கானின் சிக்கந்தர் படமும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், தெலுங்கில் ராபின்ஹுட் படம் வெளியாகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் ஏற்கனவே வெளியான அதீத சர்ப்ரைஸ் பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டாகி பல இளம் பெண்களை பாவாடையை இழுத்துவிட்டும் மல்லிகைப்பூவை வைத்து மேலாடையை உருவாக்க வைத்தும் ரீல்ஸ்கள் பறந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ராபின்ஹுட் படத்தில் ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வில்லனாக நடித்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

லைகர் படத்தில் மைக் டைசன்: விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் வெளியான லைகர் படத்தில் இப்படித்தான் மல்யுத்த வீரர் மைக் டைசனை கொண்டு வந்து நடிக்க வைத்து மொக்கை செய்துவிட்டார்கள். அதுபோல டேவிட் வார்னர் விஷயத்தில் எதுவும் நடக்காமல் இருந்தால் சரி என்றே ரசிகர்கள் கூறுகின்றனர். ராஜமெளலியுடன் விளம்பரம் ஒன்றில் முன்னதாக நடித்திருந்த டேவிட் வார்னர் ஐபிஎல் ஆட வந்த இடத்தில் அப்படியே பிடித்து போட்டுவிட்டார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இத்தனை கோடி சம்பளமா?: ராபின்ஹுட் படத்தில் வில்லனாக நடிக்க டேவிட் வார்னருக்கு 4 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி டோலிவுட்டையே ஷாக் ஆக்கியுள்ளது. படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை ஸ்ரீ லீலாவுக்கே இன்னமும் 4 கோடி சம்பளம் கொடுக்க வாய்ப்பில்லையே என்றும் கூறுகின்றனர். இதையெல்லாம் பார்த்தார் என்றால் ஐபிஎல் ஏலத்தில் வரும் சம்பளத்தை விட சினிமாவில் அதிகம் கிடைக்குதே என தொடர்ந்து இங்கேயே செட்டிலாகி விடப்போகிறார் என்கின்றனர்.

புரமோஷனுக்கு மட்டுமே: ஆனால், டேவிட் வார்னர் படத்தில் எல்லாம் நடிக்கவில்லை என்றும் ராபின்ஹுட் படத்தை ஐபிஎல் ஸ்டேஜில் புரமோட் செய்யப் போகிறார் என்றும் அதற்காக மட்டும் அவருக்கு 2.25 கோடி ரூபாய் வரை சம்பளமாக கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X