Maaman Vs DD Next Level Box Office: முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் பந்தயத்தில் வென்றது சூரியா? சந்தானமா?

சென்னை: மே மாதம் வந்துவிட்டாலே தமிழ் திரையுலகில் ரசிகர்களை குடும்பத்துடன் அதுவும் குறிப்பாக குழந்தைகளுடன் தியேட்டருக்கு அழைத்து வருவதற்கு திட்டம் போட்டு படங்களை ரிலீஸ் செய்வார்கள். அப்படி இந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் தான் சூரியின் மாமன் மற்றும் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல். நேற்று ரிலீஸ் ஆன இந்த படத்தின் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

மாமன் சூரி நடித்திருப்பது மட்டும் இல்லாமல், சூரி அந்த படத்தின் கதையை எழுதியும் உள்ளார். விலங்கு வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் படம் பக்கா ஃபேமிலி சப்ஜெக்ட். படத்தில் சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரன் என பலர் நடித்துள்ளார்கள். படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தின் கதையை சூரி தனது சொந்த வாழ்க்கையில் இருந்து எழுதியதாக தெரிவித்தார்.

படம் பார்த்த ரசிகர்கள் படத்தை குடும்பத்துடன் பார்க்க பக்காவான படம். உறவுகளின் முக்கியத்துவம் குறித்து படத்தில் சிறப்பாக பேசியுள்ளார்கள். இப்படி ஒரு படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்று பாசிட்டிவாகவும், படத்தில் ஓவர் சென்டிமென்ட் காட்சிகளை வைத்து சீரியல் ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டார்கள். படத்தில் சூரியின் அக்கா மகனாக நடித்துள்ள குழந்தை கதாபாத்திரத்தின் சேட்டைகள் ரசிக்கும் படியாக இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும் எரிச்சல் ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Day 1 Box Office Comparison Between Soori Maanam and Santhanam DD Next Level Details Here

காமெடி பட்டறை: அதேபோல், நடிகர் சந்தானத்தின் எவர் கிரீன் ட்ரேட் மார்க் படமாக மாறிவிட்டது டிடி. தில்லுக்கு துட்டு என பெயர் வைத்தால் அந்த படத்தின் முன்னால் தயாரிப்பாளருக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என, படத்தின் பெயரை டிடி நெக்ஸ்ட் லெவல் என்று வைத்துள்ளார்கள். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானத்தின் காமெடி கொட்டகையில் இருக்கும் மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மாறன், நிழல்கள் ரவி என பலர் நடித்துள்ளார்கள். இது மட்டும் இல்லாமல், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

டிடி நெக்ஸ்ட் லெவல்: படத்தை தவறாக விமர்சனம் செய்யும் ரிவ்யூவர்களை பேய் எப்படி பழி வாங்குகிறது என்ற ஒன் லைனை வைத்து மொத்த படத்தையும் வழக்கமான ஹாரர் மற்றும் காமெடி என படக்குழு கொடுக்க முயற்சித்துள்ளது. சந்தானத்தின் காமெடி படம் முழுக்க ஒர்க் அவுட் ஆனாலும், மொட்டை ராஜேந்திரன் கதாபாத்திரம் தனியாக ஸ்கோர் செய்துள்ளது. ரீவாட்சபுல் படத்திற்கான அடர்த்தி இந்த படத்தில் இல்லை என்றாலும், ஒர்த் டூ ஒன்ஸ் எனக் கூறும் அளவுக்கு ஒரு முறை பார்க்க ஏதுவான படமாக இந்த படத்தை மொத்த படக்குழுவும் கொடுத்துள்ளது.

Day 1 Box Office Comparison Between Soori Maanam and Santhanam DD Next Level Details Here

வசூல்: இந்த இரண்டு படங்களின் முதல் நாள் வசூல் குறித்து sacnilk வலைதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி சூரியின் மாமன் படம் முதல் நாளில் ரூபாய் 1.75 கோடிகள் வசூல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் முதல் நாளில் ரூபாய் 3 கோடி வசூல் செய்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என படக்குழு நம்புகிறது.

Take a Poll

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X