டென்ஷன் ஆன சிபி... இன்னைக்கு எபிசோட் பயங்கரமா இருக்குமோ… ரசிகர்கள் ஆர்வம்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபினய், இசைவாணி, சுருதி, பாவ்னி, சிபி, அக்ஷரா, ஐக்கி மற்றும் நிரூப் ஆகியோர் உள்ளனர்.
இவர்களில் யார் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. பிக்பாஸ் தொடங்கி நான்கு வாரங்கள் முடிந்த நிலையிலும் அபினய் இருப்பதே தெரியவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
கடந்த வார இறுதி எபிசோட்களிலும் கமல்ஹாசன் இதை சுட்டிக்காட்டினார். இந்நிலையில், இந்த வாரம் அபினய் எலிமினேட் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி கொண்டாட்டம்
பிக் பாஸ் வீட்டில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக இருந்தது. போட்டியாளர்களுக்கு அவர் அவர்களின் வீட்டிலிருந்த சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் தீபாவளி வாழ்த்து கூறப்பட்டது.

நெட்டிசன்ஸ்
இதையடுத்து, இந்த வார கேப்டன் தலைவருக்கான 2வது ப்ரோமோவில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொண்டனர். இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அடேய் என்னடா
ஒரு நெட்டிசன்ஸ், அடேய் என்னடா இது சிபியை இவனையே இவ்வளவு கோவம் வர வச்சி இருக்கீங்க, சோ இன்னைக்கு எபிசோடு பயங்கரமா இருக்குமோ என்று பகிர்ந்துள்ளார்.

சாவடிக்காதீங்க
மற்றொரு நெட்டிசன்ஸ், டேலியும் இந்த மாரி டாஸ்க் குடுங்கடா எப்பா, அத விட்டுட்டு அழகுற டாஸ்க் கொடுத்து சாவடிக்காதீங்க. இன்னிக்கு பாக்குறேன் என பகிர்ந்துள்ளார்.

மக்களே கெஸ் பண்ணுங்க
ஒரு நெட்டிசன்ஸ், எனக்கு கத்தி பேசனு பிடிக்காது என்று யாரோ ஒருத்தவங்க அடிக்கடி சொல்லுவர்...கெஸ் பண்ணுங்க மக்களே. என பதிவிட்டுள்ளார்.

வாங்க டா வாங்க
ஒரு தீவிர பிக் பாஸ் பிரியர், வாங்க டா வாங்க டா இப்டி ஒரு டாஸ்க்கு தான் இவ்வளவு நாள் காத்திட்டு இருந்தேன். என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்
பிக் பாஸ் வீட்டில் இத்தனை நாள் அமைதியாக இருந்த சிபி இந்த டாக்ஸில் மிகவும் ஆத்திரதில் அனைத்து பொருட்களையும் போட்டு உடைக்கிறார். இதனால் இன்று , பிக் பாஸ் வீட்டில் தரமான சம்பவம் இருக்கு என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











