செருப்ப கழட்டி அடி… கோபத்தில் கத்திய ராஜு…. பிக் பாஸ் இன்றைய ப்ரோமோ !

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அந்த ப்ரோமோவில் இமான் அண்ணாச்சிக்கு ராஜுக்கு கார்டன் ஏரியாவில் தண்டனை வழங்கப்படுகிறது.

ஹவுஸ்மெட்டுகள் அளித்த தண்டனையால் கடுப்பான ராஜு , செருப்ப கழட்டி அடி என்று கூறுகிறார்.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில், நமீதா, அபிஷேக், சின்னப்பொண்ணு,ஸ்ருதி ஆகியோர் வெளியேறி உள்ளனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அக்ஷ்ரா, அபினய், இமான், ராஜு, பாவ்னி, மதுமிதா, சிபி ஆகியோர் உள்ளனர்.

ராஜு நாமினேஷனில்

ராஜு நாமினேஷனில்

இத்தனை வாரங்களாக ராஜூவின் பெயர் நாமினேஷனில் வராதநிலையில், முதன் முறையாக இந்த வாரம் அவர் நாமினேஷனில் வந்துள்ளது. ராஜுவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருப்பதால் அவர் முதல் நபராக சேவ் செய்யப்பட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தவாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

3வது ப்ரோமோ

3வது ப்ரோமோ

இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், முகத்திற்கு நேராக கருத்துக்களை சொல்ல தைரியம் இல்லாமல், தனித்தன்மையை இழந்து இருக்கும் இரண்டு நபர்களை சொல்ல வேண்டும் என்று பிக் பாஸ் அறிவிக்கிறார். இதில், பிரியங்கா, சிபி, இசைவாணி,தாமரைச் செல்வி ஆகியோர் ராஜு மற்றும் இமான் அண்ணாச்சியின் பெயர்களை கூறுகிறார்கள். இதனால் இவர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கப்படுகிறது.

செருப்ப கழட்டி அடி

செருப்ப கழட்டி அடி

இந்த தண்டனை கார்டன் ஏரியாவில் நடைபெறுகிறது. இதில் மற்ற போட்டியாளர்கள் ராஜூ மற்றும் இமான் அண்ணாச்சி தலையில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றுகிறார்கள். இந்த தண்டனையால் எமோஷனல் ஆன ராஜூ செருப்ப கழட்டி ஒரு அடி அடிச்சிட்டுப்போ என்கிறார். ராஜூவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த ப்ரோமோ வால் இன்றையை எபிசோடுக்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X