Superman Teaser Trailer: ஹாலிவுட் ஹாலிவுட் தான்.. மிரட்டிவிட்ட சூப்பர் மேன் டீசர்.. ரிலீஸ் எப்போ?
லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக அளவில் எப்போதுமே, ஹாலிவுட் படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அதிலும் சூப்பர் ஹீரோ படங்கள் என்றால் ரசிகர்களுக்கு எப்போதுமே, நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும் உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் நீண்ட நாட்களாக இருந்த படம் சூப்பர் மேன். ஜேம்ஸ் கன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் அப்டேட்டுக்காகவும், படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதற்காகவும், ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தனர். இப்படியான நிலையில் படத்தின் டீசர் ட்ரைலர் படக்குழுவால் இன்று அதாவது டிசம்பர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
DC-இன் காமிக்ஸ் கதாபாத்திரங்களில் பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பப்பட்ட கதாபாத்திரம் சூப்பர் மேன் கதாபாத்திரம். டீசரில் சூப்பர் மேன் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. பனி மலையில் சூப்பர் மேன் மேலிருந்து வந்து விழுகின்றார். முகத்தில் ரத்தம் வழிய வழிய ரத்தத்தை துப்பிக்கொண்டு, தனது செல்லப்பிராணியான சூப்பர் டாக் அதாவது சூப்பர் நாயைக் கூப்பிடுகின்றார். பனியை பிளந்துகொண்டு வரும் தனது செல்லப்பிராணி, அவரது முகத்தில் இருந்த, ரத்தத்தை நக்கி சுத்தம் செய்தது. மேலும், சூப்பர் மேன் தனது செல்லப் பிராணியிடம் தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொல்கின்றார்.

நிஜ வாழ்க்கையில், சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் உள்ள டேவிட், பிரபல பத்திரிகையில் நிருபராக பணியாற்றுகின்றார். மேலும் சூப்பர் மேனின் காதலி கதாபாத்திரமும் காண்பிக்கப்படுகின்றது. டீசரில் DCயில் இருக்ககூடிய, மற்ற சூப்பர் ஹீரோக்கள் அறிமுகமாகும் காட்சிகளும் உள்ளன. குறிப்பாக ரசிகர்களின் பெரும் விருப்பத்தினை ஈர்த்த கதாபாத்திரங்களான, எடி கதேகி மிஸ்டர், நாதன் ஃபில்லியன், கிரீன் லான்டர்ன் ஆகிய கதாபாத்திரங்களும் டீசர் ட்ரைலரில் இடம் பெற்றுள்ளது.
டீசர் ட்ரைலர்: டீசர் ட்ரைலர் மொத்தம், 2 நிமிடங்கள் 19 நொடிகள் படக்குழு தரப்பில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. டீசரைப் பார்த்த ரசிகர்கள், தங்களது கருத்தினை இணையத்தில் பெரும் மகிழ்ச்சியோடு தெரிவித்து வருகின்றனர். ரசிகர் ஒருவர் சூப்பர் மேன் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கன் - ஐ டேக் செய்து, சூப்பர் மேன் கதாபாத்திரத்தை மிகவும் தத்ரூபமாகக் கொண்டு வந்ததிற்காக நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.

அரசியல்: மற்றொரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் முதலில், உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தேன். ஆனால் டீசர் ட்ரைலரைப் பார்த்த பின்னர், உங்கள் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. படம் வெற்றி பெற வாழ்த்துகள். படத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டு உள்ளோம் எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு ரசிகர், " ஜேம்ஸ் கன் உங்களால் இந்தப் படத்தினை சிறப்பாகச் செய்யமுடியும் என நான் நினைக்கின்றேன். ஆனால், இந்த தலைமுறைக்கு நீங்கள் சிறப்பான சூப்பர் மேனைக் கொடுப்பீர்கள் என நினைக்கின்றேன். அரசியலை ஒதுக்கி வைத்துவிடலாம். டீசர் ட்ரைலர் மூலம் அனைவரையும் பிரமிப்படையச் செய்துவிட்டீர்கள்" என பதிவிட்டுள்ளார்.
ரிலீஸ் தேதி: டீசர் ட்ரைலரில் படம் வரும் 2025ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி, வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் படம் எத்தனை மொழிகளில் ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்புகள் எல்லாம் வெளியாகவில்லை. படம் 3டியில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











